கலித்தொகை – அரிய
செய்தி – 18 - 19
இவ்வழகியைப் புறம் விடுத்தனரே….!
நீயும் தவறிலை நின்னைப்
புறங்கடைப்
போதரவிட்ட நுமரும் தவறு இலர்
நிறையழி கொல்யானை நீர்க்கு
விட்டாங்கு
பறை அறைந்தல்லது செல்லற்க
என்னா
இறையே தவறு உடையான்
கபிலர்.
கலித். 56 : 30 – 34
கண்டவர் மயங்கும் பேரழகு படைத்தவளே ! நீயும் குற்றமற்றவள் ; நின்னை வெளியே வரவிட்ட நின்
சுற்றத்தாரும் குற்றம் உடையவர் அல்லர்; மதங் கொண்ட யானைய நீர்த் துறைக்கு இட்டால் பறைசாற்றிச்
சொல்வார்கள் அதுபோல் நீ வருகிறாய் என்று பறை சாற்றியே சொல்லியிருக்க வேண்டும் ; அப்படிச்
செய்யாத மன்னனே தவறு உடையவன் ஆவான்.
கலித்தொகை – அரிய
செய்தி – 19
தைந்நீராடல்
தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ
கபிலர்.
கலித். 59 : 13
தலைவன் : தலைவி…. நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப்
பெறுவாயோ ?
( தைந்
நீராடல் இளம்பெண்களால் நிகழ்த்தப் பெறும் ஒரு நிகழ்ச்சி . சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறும்
இது – பண்டைத் தமிழர் தம் பண்பாட்டுத் தொடர்புடையது – மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி
நாள் தொடங்கித் தை முழுமதி நாள் வரை நாட்காலையில் நீராடி நோன்பிருப்பர். திருப்பாவை.
திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைந்நீராடல் அடிப்படையாய் அமைந்தது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக