ஐங்குறுநூறு –
அரிய செய்தி – 11
காதல் சிறப்புரைத்தல்
நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நல் நுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தெனன்
நல் நுதல் அரிவை காரினும் விரைந்தே
பேயனார். ஐங். 492
அழகிய நெற்றியை உடைய
அரிவையே ! சாயலால் நின்னை நிகர்க்கும் மயில் ஆடவும்; நின் அழகிய நெற்றி போல் நறுமணம்
கமழும் முல்லை மலரவும் ; நின்னைப் போன்றே மான்கள் மருண்டு நோக்கவும் – இவை யாவும் நின்னையே
நினைப்பித்தமையால் – நின்னையன்றி வேறெதுவும் நினையாமல் விரைந்தோடும் கார்மேகத்தினும்
விரைவாக வந்தேன்.
ஐங்குறுநூறு – அரிய செய்தி
முற்றிற்று
கலித்தொகை – அரிய செய்தி… தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக