பட்டினப்பாலை – அரிய செய்தி – 16
திருமாவளவன்
– ஆற்றல்
மலை
அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான்
வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனத்
தான்
முன்னிய துறை போகலின்
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 271 - 273
திருமாவளவன் தெய்வத்தன்மை உடையவன் ஆதலின் மலைகளை
யெல்லாம் அகழ்தலைச் செய்வான் என்றும் கடல்களை எல்லாம் தூர்த்தலைச் செய்வான் என்றும்,
தேவர் உலகத்தை மண்ணில் விழச் செய்வான் என்றும் காற்றை இயங்காமல் விலக்குவான் என்றும்
உலகத்தார் பாராட்டும்படி தான் கருதிய துறைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான்.
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
– என்றது கல்லணை குறித்த செய்தியாக இருக்கலாம்.
ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு