பட்டினப்பாலை – அரிய செய்தி – 17
காடு கொன்று
…..
காடு கொன்று நாடு ஆக்கி
குளம்
தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு
நிலை மாடத்து உறந்தை போக்கி
கோயிலொடு
குடி நிறீஇ
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.
283 -286
சோழ மண்டலத்தில், காடாகக் கிடந்த இடங்களை அழித்துப் பண்டு போலக் குடிமக்கள் வாழும்
நிலமாக்கினான். தூர்ந்த குளங்களைத் தோண்டி, நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்கினான்.
பெரிய நிலைகளை உடைய மாடங்களைக் கொண்ட உறந்தை என்னும்
தன் ஊரைத் தலைநகராக்கினான், கோயில்களையும் பழைய குடியிருப்புகளையும் முன்பு இருந்ததுபோல் நிலை நிறுத்தினான்.
அரிய ஆற்றல்கள் நிறைந்த திருமாவளவன்
, சோழ நாட்டிற்குப் புதிய தலைநகராக உறந்தையை (உறையூர்) உருவாக்கினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக