குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி
: 6
99
மலர்கள்
………………………….
வள் இதழ்
ஒண்
செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக்
குவளை குறிஞ்சி வெட்சி
……. ……..
……… ………
மா
இருங் குருந்தும் வேங்கையும் பிறவும்
கபிலர், குறிஞ்சிப்
. 61 – 95
பெரிய இதழ்களையுடைய ஒள்ளிய சிவந்த காந்தள்பூ, ஆம்பல்
பூ, அனிச்சம் பூ முதலாக குருந்தம் பூ வேங்கைப் பூ ஈறாகத் தொண்ணூற்றொன்பது மலர்களின்
பெயர்கள் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளன.
தலைவியும் தோழியும் அருவியிலும் சுனையிலும் நீராடியபின்
மரம், செடி, கொடி அகியவற்றில் பூத்த மலர்களியும் பூக்களைல்ப்போல
விளங்கும் இலைக் கொழுந்துகளையும் பறித்து அகன்ற பாறையில் குவித்தனர். இச்செயல் , மலர்கள்மேல்
அவர்கள் கொண்ட வேட்கையைப் புலப்படுத்தும். இம்மலர்கள், நிறத்தாலும் வடிவாலும் வேறுபட்டவை.
தனியாகவும் கொத்துக்களாகவும் பூப்பவை, ஓரிதழாகவும் பல இதழ்களும் கொண்டு விளங்குபவை;
விரிந்தும் குவிந்தும் காட்சியளிப்பவை ; கிள்ளியும் பறித்தும் உதிர்த்தும் எடுக்கப்
பெறுபவை ; ஒவ்வோர் இனத்திலும் பல்வேறு வகைகளாய்ப் பிரித்து அறியப்படுபவை ; தேன், மணம்,
தாது ஆகியவற்றால் பகுத்து உணரப்படுபவை ; இவையாவும் குறிஞ்சி நில மலைசாரலில் பூப்பவை.
குறிஞ்சி நிலத்திற்கும் கூதிர்காலத்திற்கும் யாமப் பொழுதிற்கும் உரிய பூக்கள், பிற
நிலப் பூக்களுடன் மயங்கியும் காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக