பட்டினப்பாலை – அரிய செய்தி – 6
நீராடல்
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு
போக புனல் படிந்தும்
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.
99 – 100
பரதவர், தங்கள் தீவினைகள் நீங்குவதற்காகக்
காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடுவர்.கடல் நீரில் குளித்தமையால் உடலில் படிந்த
உப்பு நீங்குவதற்காக நன்னீரில் நீராடுவர்.
தீவினை
நீங்கக் கடலாடுதல் இன்றும் வழக்கில் உள்ளமை நோக்குக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக