பட்டினப்பாலை – அரிய செய்தி – 9
வணிகர் வீடுகள்
குறுந்
தொடை நெடும் படிக்கால்
கொடுந்
திண்ணை பல் தகைப்பின்
புழை
வாயில் போகு இடைகழி
மழை
தோயும் உயர் மாடத்து
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 142 – 145
வணிக
வீதியில் அமைந்துள்ள மாடங்கள், அருகருகே அமைந்த படிகளைக்கொண்டு, நீண்ட ஏணிகள் சார்த்தப்பட்டவை,
வளைந்த திண்ணைகளை உடையவை, வீடுகள் பல கட்டுக்களைக் கொண்டு அமைந்தவை, சிறிய வாயிலும்,
பெரிய வாயிலும் பெரிய இடைகழிகளும் பெற்றவை, மேகங்கள் தீண்டும் உயர்ச்சியை உடையவை.
( படிக்கால்
– ஏணி ; கொடுந்திண்ணை – சுற்றுத்திண்ணை ; தகைப்பு – கட்டுக்கள் ; புழை – சிறிய வாயில்
.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக