பட்டினப்பாலை – அரிய செய்தி – 8
கடல் வாணிகம்
– சுங்க வரி
மாரி
பெய்யும் பருவம் போல
நீரினின்றும்
நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று
நீர்ப் பரப்பவும்
அளந்து
அறியா பல பண்டம்
வரம்பு
அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப்
பெருங் காப்பின்
வலியுடைய
வல் அணங்கின் நோன்
புலி
பொறித்து புறம் போக்கி
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 128 - 135
மேகங்கள் மழைக் காலத்தில் இடையறாது
செய்யும் தொழிலைப் போல, அளந்து கூற இயலாத அளவற்ற
பொருள்கள், அத்தெருவில் அமைந்துள்ள அரிய காவலையுடைய பண்ட சாலையில் வந்து குவிந்திருந்தன,
அப்பொருள்கள், கடலில் செல்லும் மரக்கலங்களில் ஏற்றப்படுவதற்காகக் குவிக்கப்பட்டிருந்தன.
வலிதாய்
வருத்தும் தன்மை கொண்ட புலியின் இலச்சினையைப் பொறித்துப் பண்ட சாலையின் வெளியே அனுப்பப்படும்
பொருள்களுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டது.
( அருங்கடி
– அரிய காவல் ; உல்கு – சுங்கம் )
தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றி.
பதிலளிநீக்கு