குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி
: 7
தழை உடுத்தி…
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா
பைவிரி
அல்குல் கொய்தழை தைஇ
பல்வேறு
உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல்லிரு
முச்சி கவின் பெறக் கட்டி
கபிலர்,
குறிஞ்சிப் . 101 -104
புற
இதழ்களை பறித்து நீக்கிப் பான்பின் படம் போன்று அகன்று விளங்கும் அல்குலுக்குத் தழையாடையைக்
கட்டி உடுத்தினோம். பலவாய் வேறுபட்ட நிறத்தைக்கொண்ட அழகமைந்த மாலைகளை எம்முடைய கரிய
தலைமுடியில் அழகு பெறச் சூட்டிக்கொண்டோம்.
தலைவியும்
தோழியும் நீராடி, மலர்கள் பறித்து, இடையிடையே கிளிகளை ஓட்டி, தழையாடை புனைந்து அணிந்து,
தலையில் மாலை சூடி, அசோக மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர்.
( கிளை
இதழ் – புற இதழ் ; கொய் தழை – நறுக்கி மட்டம் செய்யப்பட்ட தழையாடை ; உரு – நிறம் ;
கவின் – அழகு ; செயலை – அசோகு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக