தொல்தமிழர் அறிவியல் –129 : 44.
நிலம்
புடைபெயர்தல்
44. நிலம் புடைபெயர்தல்
சங்கச்
சான்றோர், நிலம் புடைபெயர்தலாகிய
’கண்டப்பெயர்ச்சி’யைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்
என்பதற்குச்
சான்றுகள்
உள்ளன.
கங்கை
யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற் பெயரல்
---இரும்பிடர்த் தலையார், புறநா. 3 : 13, 14.
வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடைய பெரும் பெயர் வழுதி , நிலம் பெயரினும் நினது ஆணையாகிய சொற் பிறழாதொழியல் வேண்டும்.
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே
---கபிலர், பதிற்றுப். 63 :
6,7
நிலவுலகம் தன் கூறுபாடு எல்லாம் நீங்கும் ஊழிக் காலம் என்றாலும் நீ
( செல்வக்கடுங்கோ வாழியாதன்) சொன்ன சொல் பொய்த்தலை அறியாய்.
நிலம் புடை பெயர்வதாயினும்
ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றே ஆயிழை கணவ
---ஆலத்தூர் கிழார், புறநா. 34 : 5 – 7
தெரிந்த ஆபரணத்தையுடையாள் தலைவ..!
நிலம் கீழ் மேலாம் காலமாயினும் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதல் இல்லையெனவும் அறநூல் கூறிற்று ;
அம்ம வாழி, தோழி!-காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
|
||
சொல் புடைபெயர்தலோ இலரே;
---மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், நற். 289 : 1 – 3
இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் நம் காதலர் தாங்கூறிய சொல்லை அதனிலைமையினின்றும் பெயர்த்துக் கூறுபவரல்லர்;
|
||
அறிவியல் நோக்கு
பூமியியுள்ள கண்டங்களுள்
ஒன்றுக்கொண்டு
தொடர்புடன்
நகர்வது
கண்டப்பெயர்ச்சி (continental drift) ஆகும். இக்கருதுகோள்
முதன்முதலில் 1596ஆம் ஆண்டு அபிரகாம்
ஒர்டிலீயசு
என்பவரால்
முன்மொழியப்பட்டு,
பின் 1912ஆம் வருடம்
ஆல்பிரடு
வேகனர்
என்பவரால்
கோட்பாடாக
விளக்கப்பட்டது. முன்னொரு காலத்தில்
உலகிலுள்ள
எல்லாக்
கண்டங்களும்
ஒன்றாகச்
சேர்ந்து
ஒரு மாபெரும்
நிலப்பரப்பாக
அமைந்திருந்தன
என்ற கருத்தை இவர்வெளியிட்டார். அதற்கு
பான்கையா (pangaea) என்ற பெயரைச்
சூட்டினார். அதற்கு
முழு உலகம் என்று பொருள். Pan எனில் அனைத்தும், முழுதும்
என்று பொருள். பான்கையாவைச்
சுற்றி
ஒரே ஒரு கடல்தான்
இருந்தது. அதற்கு
பாந்தாலசா
(Panthalassa) என்று பெயர். அதற்கு
முழுக்கடல்
என்று பொருள். ஆக ஆரம்பத்தில்
ஒரே ஒரு மாபெரும்
கண்டமும், ஒரே ஒரு மாபெரும்
கடலும்
மட்டுமே
உலகத்திலிருந்தன.
பான்கையா
விரிசல்
கண்டு பல துண்டுகளாயிற்று.
அந்தத்
துண்டுகள்
மெல்ல மெல்ல நகர்ந்து
பிரிந்தன. பூமியின்
நடுப்பகுதியிலுள்ள
சூடான பாறைக்
குழம்பில்
மிதக்கிற
கருங்கல்
திட்டுகளைப்
போல அவை பிரிந்து
சென்றன
என்று கூறினார். இது கண்டப்பெயர்ச்சிக்
கொள்கை
எனப்படுகிறது. 1950 களில் கடலடித்
தரைகள்
தீவிரமாக
ஆராயப்பட்டு
அட்லாண்டிக்
கடலின்
நடுவில்
ஒரு பெரிய மலைத் தொடரும்
கண்டுபிடிக்கப்பட்ட
பிறகு அடலாண்டிக்
கடலின்
நடுவில்
ஒரு மாபெரும்
விரிசல்
ஏற்பட்டு
அது மெல்ல அகலமாகிக்
கொண்டிருப்பது
உணரப்பட்டது.
பல கண்டங்களில் காணப்படும் புதை படிமம்
பின்னர் 1960ஆம் வருடங்களில்
தக்க நிலவியல் சான்றுகளுடன் "தட்டுப் புவிப்பொறைக்
கட்டமைப்பு"
என்ற கோட்பாட்டுடன், நகர்தலுக்கான
காரணமும்
கண்டறியப்பட்டது.
1968ஆம் ஆண்டில்
அண்டார்ட்டிக்காவில்
ஒரு புதை படிவ எலும்பு
கண்டெடுக்கப்பட்டது.
அது நீரிலும்
நிலத்திலும்
வாழ்கிற
ஒரு விலங்கினுடையது.
அது வெப்ப நாடுகளில்
மட்டுமே
வசிக்கக்கூடியது.
அது எப்படித்
தென் துருவக்
குளிர்ப்பகுதிக்கு
வந்தது
என்ற கேள்வி
எழுந்தது. முன்னொரு
காலத்தில்
அண்டார்டிக்கா
சூடாக இருந்திருக்கலாமென்று
வைத்துக்
கொண்டால்
கூட மற்ற கண்டங்களிலிருந்து
கடலைத்
தாண்டி
அது அண்டார்டிக்காவுக்கு
வந்திருக்க
முடியாது
என்று எண்ணப்பட்டது. 120 மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன் அண்டார்டிக்கா
கண்டம்
பூமியின்
வெப்பப்
பகுதியில்
இருந்த
போது அந்த விலங்கு
அதில் வசித்திருக்கலாம்.
மாண்டு, பின்னர்ப் பூமியில்
புதைந்திருக்கலாம்.
அண்டார்டிக்கா
பிரிந்து
தெற்கு
நோக்கி
நகர்ந்து
வந்த போது அதன் எலும்பும்
கூடவே வந்து விட்டது.
–விக்கிபீடியா.
Looking at the shapes
of Earth's continents today, it's easy to think of them like pieces of a jigsaw
puzzle. They look like they could have fit together once. For instance, the
western coastline of Africa looks like it fits perfectly with the eastern
coastline of South America.
And the reason the continents look this way is because they really did
fit together once. Hundreds of millions of years ago, scientists believe that
our planet had only one continent, named Pangaea. This supercontinent slowly,
eventually, broke apart to form the continents as we see them today, due to a
process called plate tectonics.-----தொடரும்…
மிகஅருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்று. அன்புடன் #இலக்குவனார் திருவள்ளுவன், #தமிழேவிழி! தமிழா விழி!
பதிலளிநீக்கு