தொல்தமிழர் அறிவியல் –139 : 47. தமிழர் மருத்துவம்
பேராசானின் அறிவியல் சிந்தனை
எத்தனை
நூற்றாண்டுக்கு முந்தைய
தொலைநோக்குப் பார்வை, இன்றைய உலகத்திற்கு – மக்கள்
வாழ்வியலுக்குப் பொருந்தி
அமைகிறதே…
செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் .குறள்.637
செயற்கையால்
புதியதோர் உலகம்
செய்யலாம் – முன்னேறிவிட்டோம் என்று முண்டியடித்துக்கொண்டு கூவலாம்
– நிலவில் குடியிருக்க
முந்தலாம் – மனிதன் வாழ்நாளை உயர்த்திவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்
– இவையெல்லாம் அறிவியல்
அற்புதங்கள் என்று
அறைகூவல் விடுக்கலாம்..
இவையெல்லாம்
இயற்கையின் இருப்பு
அறியாது - இயக்கம் அறியாது
- வலிமை அறியாது இயற்கை விதியை
அழித்தெழுதும் முயற்சியே
என்பதை இயற்கை
உணர்த்திக்கொண்டே இருப்பதை
அறியமுடிகிறதல்லவா..? இனி
இந்த உலகம்
என்னாகுமோ என்ற
அச்சத்தில் மக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இயற்கையோடு இயைந்து
வாழ்தல் என்பது
தமிழன் கண்டுபிடித்த
அறிவியல் உண்மை என்பதை
இக்குறட்பா
உணர்த்துகிறது.
இக்காலத்து
மட்டுமன்று இனி
எக்காலத்தும் இவ்வறியல்,
உலகத்திற்குப் பாடமாக
அமையும் என்பதில்
ஐயமில்லை.
மருந்தில்லா
மருத்துவம்
உணவே மருந்து
சாவா மருந்து, மூவா மருந்து என்றெல்லாம்
தமிழர் கூறுவர். சாகாமல் இருக்கவும் முதுமை
தோன்றாமல் இருக்கவும் மருந்து கண்டுபிடிக்கத் தமிழன்
மேற்கொண்ட அறிவியல்
முயற்சி.
விருந்தும்
மருந்தும் மூன்று
நாளைக்கு - மூன்று நாட்களுக்குமேல் இரண்டுக்கும் மதிப்பில்லை என்பது
தமிழன் கண்ட
வாழ்வியல் அறிவியல்.
பத்து மிளகு இருந்தா – பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் – என்ற
பழமொழி தமிழனின்
அறிவியல் மருத்துவம்.
குடலேத்தம் தெரியாமா கோடி வைத்தியம் பண்ணினானாம் – என்ற
பழமொழி இன்றும்
செல்லுபடியாகிறதே.
சுக்கு, மிளகு, திப்பிலி - தப்பில்லை , இன்னும் இஞ்சி,
சுக்கு, கடுக்காய் உணவாகும் மருந்தன்றோ..!
உடம்பாரழியின் உயிராரழிவர்
– என்பார் திருமூலர்.
உடம்பை வளர்த்து
உயிரை வளர்க்கும்
முறையே சித்தர்
மருத்துவ முறை.
அவ்வழி நின்றே
திருவள்ளுவராகிய பெருஞ்சித்தரும் நோயில் நலிந்து பாயில்
படுக்காது இருக்க
ஏற்றவழிகளை ஆராய்ந்து
கூறியுள்ளார். நீரைப்
போற்றி, நிலவுலகைப் போற்றி உணவளிக்கும் உழவைப்
போற்றுகின்றார்.
உழுவார் உலகத்தார்க்கு
ஆணி
(1032) என்றதன்
பொருளாவது உலக
உயிர்கள் வாழ
உணவளித்தலாலே. “ மண்டிணிஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் – உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே-
என்பதால் உழவன்
உயிர்கொடுக்கும் ஆற்றல்
வாய்ந்தவனாவான். தமிழன்
–
சொந்த உழைப்பினால்
சோறுண்ணும் இயல்புடைய
உழவர்கள் பிறரிடத்தில்
பிச்சை கேட்கமாட்டார்கள்;
ஆனால் கேட்பவர்களுக்கு இல்லை யென்னாமல் சிறிதேனும்
கொடுப்பார்கள்.
இரவார் இரப்பார்க்கு
ஒன்றுஈவர் கரவாது
கைசெய்து ஊண்மாலை யவர் . .—1035; என்று
உழவனின் பெருமை
பேசுவார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – என்றார் திருமூலர்.
நோயின்றி வாழ..
உடம்பை நோயின்றி
வளர்த்தால்தான் உயிரை
வளர்க்க இயலும்.
நோயின்றி வாழும்
வழிமுறைகளைக் கண்டுபிடித்துக் கூறுவது அறிவியலா.. நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது அறிவியலா..? முன்னது, இயற்கை நல்கும் நன்மை
; பின்னது, செயற்கை நல்கும் தீமை
கலந்த நன்மை.
திருவள்ளுவர் மருந்து (அதி. 95)என்ற அதிகாரத்தில்
கூறியுள்ள கருத்துக்களைப் படித்துப் பாருங்கள். திருவள்ளுவரின் மருத்துவ அறிவியல்
அறிவு தெரியும்.
திருவள்ளுவரின் கருத்துக்களைப் புரிந்துகொண்டோரே முழுமருத்துவராகும் தகுதி
உடையவர்.
நோயும் மருந்தும்
மருத்துவனுக்கு நோய் அறியும்
முறையை இரண்டு
குறட்பாக்களில் சொல்லிக்
கொடுக்கிறார் வள்ளுவர்-
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். --948
நோய் கண்டறிதல்- காரணம் கண்டறிதல் - நோய் நீக்கும்
வழி அறிதல்
- எவ்வழி நலம் பயக்கும்
என ஆராய்தல்.
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். --949
நோயுற்றான் தன்மை
அறிதல் - நோயின் தன்மை
அறிதல் - நோயுண்ட காலம்
அறிதல்- மருத்துவன் இவை யாவற்றையும்
கருத்தில்கொண்டு மருத்துவம்
செய்தல் வேண்டும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச்
செல்வான்என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. --950
மருந்து என்பது
யாதெனின் - நோயாளி – மருத்துவன் - மருந்து – மருந்து ஆக்குநர்
ஆகிய இந்நான்கும்
ஒருங்கிணைந்து இயல்வதே
நோய் தீர்க்கும்
மருந்தாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக