வெள்ளி, 15 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –142 : 47. தமிழர் மருத்துவம்

தொல்தமிழர் அறிவியல் –142 : 47. தமிழர் மருத்துவம்

 தழை மருத்துவம்  ; இசை மருத்துவம் ; அறுவை மருத்துவம்.

1.தழை மருத்துவம் 

                           போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு . --ஒளவை சு.துரைசாமி.

தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
-------அரிசில்கிழார்.புறநா.281: 1 – 6.

                         இனிய கனிகளைத்தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி ; யாழுடன் பல இசைக் கருவிகள் ஒலிக்க; கையில் மையாகிய மெருகினை இட்டு; வெண் சிறு கடுகினைத் தூவி ; ஆம்பல் குழலை ஊதி ; மணியோசையை எழுப்பி ; காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து... இரவமொடு வேம்பு மனைச் செருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன.

கொடுவரி பாய்ந்தெனக்  கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்புஎன
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
      -------பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 302 – 304
                           தம் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் பட்ட நெடிய, பிளந்து காணப்படும் புண்ணை ஆற்றுவதற்குக் காவலெனக் கருதி, அறல் போன்ற கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாட்டால் எழும் ஓசையும்

2. வேப்பந் தழை செருகுதல்

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லாமனையும் கல்லென்றவ்வே
                                          --------வெள்ளைமாளர், புறநா.296 : 1 - 3
               புண்பட்டோரைப் பேய்கள் அணுகாதிருத்தற் பொருட்டு வேப்பந்தழையை வீட்டின் முன் இறப்பிற் செருகுதலும் காஞ்சிப் பண்ணைப் பாடுதலும் ஐயவியைப் புகைத்தலும் மரபு. ---.வே.சா.     
அறிவியல் நோக்கு

                                      Neem leaves are used to treat chickenpox and warts by directly applying to the skin in a paste form or by bathing in water with neem leaves. In order to increase immunity of the body, neem leaves are also taken internally in the form of neem capsules or made into a tea. The tea is traditionally taken internally to reduce fever caused by malaria. This tea is extremely bitter. It is also used to soak feet for treating various foot fungi.  It has also been reported to work against termites. In Ayurveda, neem leaves are used in curing neuromuscular pains. Neem leaves are also used in storage of grains.
                        இன்றுங்கூட நாட்டுப்புற வழக்கில் அம்மை நோய் கண்டாரைத் தனித்திருக்கச் செய்வதும் வீட்டில் வேப்பிலைச் செருகுதலும் வேப்பந்தழை கொண்டு உடம்பை வருடிவிடுதலும்  சுடுநீரில் இட்டு நீராடுதலும் தேநீராக்கிப் பருகுதலும் புண்களுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலும் இன்றும் நடைமுறையில் உள்ளவையே.

வீட்டில் தூய்மையைப் பாதுகாத்தலும்  அவர் அருகில் இருந்து மாரியம்மன் தாலாட்டுப் பாடல் பாடுவதும்(இசை மருத்துவம்) தமிழர்தம் வழக்கமாகும்.
வேப்பிலையின் அரிய மருத்துவக் குணங்களைச் சித்தர் மருத்துவம் விரித்துரைக்கின்றது.-------தொடரும……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக