ஞாயிறு, 10 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –137 : 46. தொல்காப்பியம் – புள்ளி

தொல்தமிழர் அறிவியல் –137 : 46. தொல்காப்பியம்புள்ளி


                இவ்வரை வட்டம் முழுவட்டமாகிச் சுழி என்றுபெயர் பெற்றிருக்கலாம். கணக்கியலில் இடம்பெறும் சுழி (ஜீரோ) இந்தியர் அளித்தது என்று வரலாறு கூறுகிறது. பன்னெடுங்காலத்தில் இந்தியா முழுமையும் தனதாகக் கொண்டிருந்த தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பல்லவோ இது.

முப்பாற் புள்ளி

சார்பெழுத்துக்களுள் அடங்கும் ஆய்தம்குற்றியலிகரம், குற்றியலுகரம் போல அரை மாத்திரை பெற்று நிற்கும். அக்கேனம், ஆய்தம், தனிநிலை, புள்ளி, ஒற்று என , இவ்வெழுத்துக்கு ஐந்து பெயர்கள் உள.

  ஆய்த எழுத்தின் அருமையை உணர்த்தும்பொருட்டு, திருவள்ளுவர் வெஃகாமை (18)  அதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் இவ்வெழுத்தை எடுத்தாண்டுள்ளார்.

வடிவம்

குற்றியலிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன. (2)

 “ குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மைய -று.” – இளம்பூரணர்.

   ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப்போல, மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற்புள்ளியும் என்றார். – நச்சினார்க்கினியர்.

 இவ்விரு உரையாசிரியர்களும் -   - இதுவே வடிவம் என்கின்றனர்.
 ஆய்தம் குற்றெழுத்துக்குப் பின்னும் உயிர்மெய் வல்லெழுத்துக்கு முன்னும் இரண்டின் சார்பாக ஆய்தவொலி தோன்றும். “ இரு சிறகெழுப்ப எழும் உடலது போல,”  என்று உரையாசிரியர்கள் உவமை கூறுவர். எஃகு, அஃறிணை, பஃது  போன்றவை

கணிதக் குறியீடு

தொல் தமிழ் எழுத்துக்களில் (ஓசை / ஒலி) ஒன்றாகிய ஆய்தம் இதே வடிவில் கணிதத்தில் ஒரு குறியீடாக Therefore Sign () விளங்குகிறது. இச்சொல்ஆகையால், எனவே, இக்காரணத்தால் எனப் பொருள்தரும் ஒரு குறியீடாகும். கணக்கில் படிநிலைகளையும் விடையையும் இணைக்கும் இடத்தில் இக்குறியீடு செயல்படுகிறது. ஆய்தக்குறிஇரு சிறகெழுப்ப எழும் உடலது போலக்கணித அறிவியல் குறியீடாக உள்ளது. ஆய்த எழுத்தின் வடிவமும் பொருளும்  ஒன்று போலவே கணிதக் குறியீடானது விந்தையே. மிகத்தொன்மைவாய்ந்த இக்குறியீடு( ஆய்தம்) ஜான்ரன் என்பவரால் 1659 ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டுப் பின் நிலைபெற்றது.

   ஆய்தத்தின் தோற்றம் , வளர்ச்சி, நிலைபேறு ஆகியவற்றை மேலும் ஆராய்ந்து தமிழரின் குறிப்பாகத் தொல்காப்பியரின் அறிவியல் பங்களிப்பை உறுதி செய்யவேண்டும்.------தொடரும்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக