தொல்தமிழர் அறிவியல் –145 : 47. தமிழர் மருத்துவம்
சிந்துவெளி அகழ்வாராய்ச்சில் கிடைத்துள்ள சான்றுகளின்படி, கி.மு.
3000 ஆண்டுகளுக்கு முன்பே
அறுவை மருத்துவத்திலும் பல் மருத்துவத்திலும் சிறந்துவிளங்கியமை அறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பல்
மருத்துவத்தில் பல்துளையிடல்
முறையினை தொல்லியல்அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்நிகழ்வின் காலப்பகுதி
கி.மு.
9000 – 7000 என்றும்
கணக்கிட்டுள்ளனர்.
இந்தியாவில்
அறுவை மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும்
சுஸ்ருதர் (கி.மு.
600) இமாலயத்தில் வாழ்ந்தவர்.
இவர் காசியில்
மருத்துவர் தன்வந்திரியிடம் அறுவை மருத்துவம் பயின்றவர்.
’ சுஸ்ருத சம்கிதா”
நூல் இவருடைய
மருத்துவத்
தொகுப்பாகும்.
தற்கால அறுவை
மருத்துவ முன்னோடியாக
இவர் போற்றப்படுகிறார்.
தமிழுலகில்
பதினெண் சித்தர்கள்
மருத்துவத்திற்கு ஆற்றிய
அரும்பெருந்தொண்டுகளைப் புதிய கண்டுபிடிப்புகளை இன்றும் உலகம் வியந்து
போற்றுதலை நாம்
அறிவோம்..
இன்றைய
மருத்துவ அறிவியலோடு
சித்தர் மருத்துவம்
வளர்ந்து வருதலே
இம்மருத்துவமுறைக்குக் கிடைத்த அறிவியல்
ஒப்புதலாகும். சித்தர்கள்
உடலியல் உளவியல்
நோயியல் என்றவாறு
அறிவியல் நோக்கில்
ஆராய்ந்து மருத்துவம்
செய்தனர் ‘நோய்நாடி நோய் முதல்நாடி…’ ’ வளி முதலா எண்ணிய
மூன்றும்’ – ( திருக்குறள், மருந்து.- 95) ஆராய்தறிந்த உண்மையை வள்ளுவத்தில்
காணலாம்.
மேற்சுட்டிய
சங்கஇலக்கியப் பதிவு
அறுவை மருத்துவத்தில் வெள்ளிய ஊசி பயன்படுத்தியதைச் சுட்டுகிறது.. தொல்தமிழ்ப் பழங்குடியினர்
கருவேல மர
முள்ளைப் பயன்படுத்தி
அறுவை மருத்துவம்
செய்துள்ளனர் . முள்ளை
முள்ளால் எடுத்தல்
என்னும் பழமொழியை
நோக்குக.
Surgery
and Medicare among the Tamils
“The quotes drawn
from Purananooru, Malaipatukataam testify that ancient Tamils used to tune the
flute of Aambal stem, tolling small bells, blowing of flavored smoke by burning
white mustard and singing the
songs of Kaanchi meter in the halls where they keep the warriors wounded in battles. Foliage if margosa and
Irava tree will be inserted on the ceiling in the front yard of their homes.
Apart from providing a congenial
therapeutic effect on the
warriors, these placements of folio, sound of the bell incense and songs would
prevent the vicious demons from entering the house, they believed.
It may be
recalled that even to-day in the rural areas, neem leaves are found inserted on
the ceiling of houses where persons affected with measles or small pox are kept
for recuperation. Invocation of lullaby on a female deity Mariyamman will also
be sung to provide a soothing effect on the diseased person.”------தொடரும்.....18/11.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக