வியாழன், 7 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –134 : 46. தொல்காப்பியம் – புள்ளி

தொல்தமிழர் அறிவியல் –134 : 46. தொல்காப்பியம்புள்ளி

46. தொல்காப்பியம்புள்ளி

                          “ தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் மொழிநூல்(Science of Language) என்றும் பொருள்இலக்கியம் பற்றிய நூல் (Science of Literature) என்றும் கொள்க. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது தொல்காப்பியம்.” பேராசிரியர் சி.இலக்குவனார்.

                          தொல்காப்பியம் சுட்டும் செய்யுள் உறுப்புக்கள் 26 + 8 = 34
அவற்றுள்
மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
மாத்திரை ஒலி அளவு  ( ஒரு முறை கண் இமைத்தல் / கை நொடித்தல்) –                                                          (டெசிபல் – a unit for measuring the relative loudness of sound . Velacity speed especially in a given direction. )
                  தமிழர் உலகத்திற்கு வழங்கிய அருங்கொடைகளுள் கணக்கியல் சிறப்பிடம் பெறுகிறது. புள்ளியிட்டு ஒன்றன் மதிப்பைக் ( ஒலி அளவை) குறைக்கும் முறையை  அறிவியல் நோக்கில் வழங்கியவர் தொல்காப்பியரே.

                          தமிழின் எண்ணும் எழுத்தும் கணக்கியலை அடிப்படையாகக் கொண்டவை. புள்ளி ( DOT ) கணிதத்தின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதை யாவரும் அறிவர். இனி எண்ணிலும் எழுத்திலும்  புள்ளியின் அறிவியல் ஆளுமை குறித்து அறிவோம்.

எழுத்துக்கள்

தொல்காப்பியர் முதலெழுத்துக்கள் முப்பது என
எழுத்தெனப் படுப
அகரமுத
னகர விறுவாய் முப்பஃதென்ப
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. என்பார்.
பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யும்முப்பது ஆம்.

புள்ளி எழுத்துக்கள்

                    தொல்காப்பியர், மொழியின் இயல்பான இயக்கத்திற்கு எழுத்துக்களின் தோற்றம், (பிறப்பு) எண்ணிக்கை, இடம், பங்களிப்பு, பொருள் புலப்படுத்தம் ஆகியவற்றை அறிவியல் நோக்கில் நுணுகி ஆராய்ந்து உயிர்+ மெய் எழுத்துக்களில் புள்ளியை நிலைநிறுத்தி எழுத்துக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் பெருகாமல் காத்து, மொழியை வளப்படுத்தினார். அறிவியல் நோக்கில் எழுத்துக்களை வரையறுத்து, வகைதொகைப்படுத்தித் தங்குதடையின்றி மொழி நிலைத்துநிற்க வழிவகுத்தார்.

                           புள்ளி (மெய்) முதலெழுத்துக்கள் இரண்டனுள் ஒன்றாக வகுத்துப் புள்ளியிடல் வழி அவ்வெழுத்தின் மதிப்பு (ஒலி அளவு) குறைத்தல் இலக்கணமாக வகுத்துத் தமிழுக்கு அறிவியல் செறிவு நிறைந்த ஆக்கத்தைத் தந்தவர் தொல்காப்பியர். ஐந்து என்ற முழு(5) எண்ணுக்கும் . புள்ளி ஐந்து (.5)என்ற எண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நோக்குங்கள் ; புள்ளியின்றி இன்றைய கணக்கியல் இயங்காது. தொல்காப்பியர் எழுத்தில் தோற்றுவித்த புள்ளிஅதன் இலக்கணம்அதன் மதிப்புஅதன் இயக்கமுறை யாவும் தமிழ் அறிவியல் மொழி என்பதை உணர்த்துகிறதே.

                           - ஒரு மாத்திரைக்மெய்- ½  மாத்திரை  இவ்விரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள வேறுபாடு( 5)(  .5 ) இவ்விரண்டு எண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒத்திருக்கின்றதல்லவா ? தொல்காப்பியர் எழுத்தின் தலையில் இட்ட புள்ளி எண்களில்  இடப்பக்கம் இடம்பெறுகின்றனை அவ்வளவே. இவ்வாக்கம் அறிவியல் உலகத்திற்குத் தமிழன் வழங்கிய அருங்கொடைகளுள் தலையாயது. ------தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக