செவ்வாய், 5 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –132 : 45 . எழுத்துடை நடுகல்

                     நம் பண்டைய தமிழர்கள் வெட்சி, கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டுவந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர்.
                            இந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம், குசராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 202 நடுகற்களும் ஆந்திராவில் 126 நடுகற்களும் கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன.
                             சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப்பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக் கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லைநடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனைப் பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன, ‘கல்லே பரவினல்லது நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவேஎன்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்.”—விக்கிபீடியா.

                                  (In Tamil Nadu) “The hero stones found were erected in memory of heroes who laid their life, defending  their territory or making some form of  supreme  sacrifice for the sake of the community  or the region. Usually these stones, now called by scholars as ‘Virakkal’ or Hero stones, shoe the figure of the hero carved with inscriptions, giving details of the hero, the battle, the king in whose time the battle took place and the person who erected the stone. Either they stand alone or in groups and are usually found outside the village limits, nearby a tank or lake.
                                     
                            Some of the hero stones with inscriptions were exactly in the form of Dolmens with three upright slabs and capping stone. The figure of the hero is generally carved on the back slab facing the entrance as if it is a temple shrine and the figure of the hero, an image of a god. Plain dolmens were also found without any figures or writings by the side of such hero stones, indicating that they were contemporary with the nearby hero stone. Such inscribed hero stones have been found from almost 3rd c.CE to the 16th c.CE attested by inscriptions. Obviously the tradition continued till very late.
                      
                            The ancient Sangam literature refers to a large number of hero stones and the circumstances under which those were erected. The Sangam works, mainly the Purananuru anthology, refer to the memorial stones as ‘nadukal’ or simply ‘kal’ in the context.” --- Tamil Nation.------தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக