திங்கள், 25 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –152 : 49. சூரியன் பூமியை விழுங்கும்

தொல்தமிழர் அறிவியல் –152 : 49. சூரியன் பூமியை விழுங்கும்

.49. சூரியன் பூமியை விழுங்கும்

நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம்புடை பெயர்வ தன்றுகொல் இன்றென
மன்னுயிர் மடிந்த மழைமா றமையத்து
                                          மாமூலனார், அகநா. 31: 1- 4

                தீயைப் போன்று சினந்தெழுந்த வெம்மை விளங்கும் ஞாயிறு விளைநிலத்தே யுள்ள பயிர்கள் தீய்ந்தொழிய அழித்தலின், இன்று நிலவுலகம் குறைவுற்று நிலைபெயரும் காலமன்றோ என்று சொல்லும்படி நிலைபெறும் உயிர்கள் மடிதற்கேதுவாகிய மழை பெய்யாதொழிந்த இக்காலத்திலே….
இன்று அறிவியல் கூறும் உண்மையைப் பன்னெடுகாலத்திற்கு முன்பே அறிவியல் புலவர் மாமூலனார், சூரியனின் வெம்மையால் உயிர்கள் அழிந்து நிலம் அழியுங்காலத்தைச் சுட்டிச் செல்கின்றார்.

அறிவியல் நோக்கு

                              இந்நிலையில் பூமியின் உள்ளமை(இருப்பு) ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட ப் பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும்.[34]ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. [34] சில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்றுப் பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.

                          சிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவைகோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது. ------தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக