வியாழன், 21 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –148 : 48. காவிரியில் கல்லணை

தொல்தமிழர் அறிவியல் –148 : 48. காவிரியில் கல்லணை

உண்மை இவ்வாறாயின்……
மலை அகழ்க்குவன்மலையை உடைத்துக் கல் எடுத்தல்
கடல் தூர்க்குவன்கடல் போலும் நீர்பரந்த காவிரியாற்றில் அணை எழுப்புதற்குத்  தூர்த்தது.

வான் வீழ்க்குவன்வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி
வளி மாற்றுவன்நளியிரு முந்நீர் நாவா யோட்டி , வளிதொழி லாண்ட வுரவோன் மருக.. ( நீர் செறிந்த பெரிய கடலின் கண்ணே மரக்கலத்தை யோட்டிப் போர் செய்தற்குக் காற்றின் நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச் செல்வனை அழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபினுள்ளானே ) மேலும் பல் பண்டம் பகர்ந்து வீசும் பன்னாட்டுப் புகார் துறைமுகத்தை உடையவன்.
 கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியது,புறநா. 66: 1, 2.

                             “கல்லணையைக் கட்டுவதற்காக கரிகால் சோழன் இலங்கைத் தீவிற்குப் படை எடுத்துச்சென்று சுமார் 12000 – (பன்னீராயிரம்) பேரை அடிமைகளாக்கிக்கொண்டு வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அவர்களை வைத்துக் காவிரி ஆற்றில் சுமார் 100 மைல் நீளத்திற்கு கரிகால் சோழன் கரை அமைத்தான். இவ்வாறு காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில், தன்னிடம் தோல்விகண்ட மன்னர்களையும் ஈடுபடுத்தி அவர்களையும் கூடையில் மண் சுமக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
வே. தமையந்திரன், பண்டைய தமிழரின் அறிவியல் சாதனைகள், .47.

காவிரி யாற்றின் சிறப்பு
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்               
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப்பு யன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
                                                                      -- பட்டினப் : 1 – 7
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல் வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே ….
காண்கவாய்த்தலைநீரைத் தேக்கும் தலை மதகு (உழவர் வழக்கு)
  --- சிலப் : 10 : 102  –  109

                  இதன் பொருளாவதுகோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனமென்னு மிவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெயரினும் காற்றுப்பொரும் குடகவரையினது உச்சிக்கண்ணே கடிய குரலையுடைய உருமேற்றோடு சூன்முதிர்ந்த பருவப்புயல் தன்பெயலாகிய வளத்தைச் சுரத்தலானே அவ்வரையிற்பிறந்த பல பண்டத்தோடு கடுகிவருதலையுடைய காவிரியினீர், முகத்தைக் குத்தியிடிக்குங் கடல் தன் வளத்தைக் கொண்டு எதிர்தலானே தேங்கி, வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கின்ற அப்புதுப்புன லொலியல்லது ஆம்பி முதலாயின ஒலித்தல் செல்லாவென்க.
-----தொடரும் …..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக