புதன், 20 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –147 : 48. காவிரியில் கல்லணை

தொல்தமிழர் அறிவியல் –147 : 48. காவிரியில் கல்லணை

48.  கல்லணை

Kallanai Dam / Grand Anicut, India

                                 Kallanai Dam, also known as Grand Anicut, is the fourth oldest dam in the world. It still serves the people of Tamilnadu, India. The dam was constructed by King Karikala Chola of the Chola Dynasty in the 2nd century AD. The dam is located on the River Kaveri, approximately 20km from the city of Tiruchirapalli.

                         The dam provides water for irrigating 400,000ha of land along the Delta Region. The structure measures 329m in length, 20m in width and 5.4m in height. Improvements were made to the dam in the 19th century by Arthur Cottons, a British general and irrigation engineer.(Water-technology.com)
                             உலகில் பழமைவாய்ந்த அணைக்கட்டுக்களில் நான்காவது இடத்தில் இருக்கும் கல்லணை, கி.பி. இரண்டாம் நூற்றாணடில் கரிகால் சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, இக்கூற்றுக்கு வலிமையான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

                      சங்க இலக்கியச் சான்றுகளைக்கொண்டு கரிகால் சோழனின் கல்லணை குறித்த செய்திகளைச் சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம்.
… …. ….    ……. வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற் பிற ரகன்றலை நாடே

சோழன் கரிகால் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது, புறநா. 7 : 10 -13
                                     வளவ! குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை மண் மறுத்தலான் மீனாலடைக்கும் புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடைய மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள்

குளிர்ந்த நீர் பரந்தஎன்றதுகாவிரியாற்றை
உடைப்புகளை மண் மறுத்தல் , என்றதுகாவிரியின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை மண் அணைத்துக் கட்டியதும் ஆகும். அதுவும் பயனின்றிப் போனதையும் அறியமுடிகிறதுமீனால் அடைக்கும்  அளவிறகு நீர் வளம் உடையதென்றார்.   

                    மீனாவயிரமுள்ள மரவகை,நீரோட்டத்தை மறித்து  வாய்க்கால்களில் சிற்றாறுகளில் கவணை ( மாட்டுத் தொழுவத்திலும் கவணை கட்டுவர் ) கட்டுதல் உண்டு ,   உறுதியான மரத் துண்டுகளை கூர்முனை கொண்டதாக்கி வாய்க்காலில் அடித்துஇறக்கி குறுக்கே வைக்கோல் கட்டுகளைப் போட்டு அடைப்பர், இவ்வாறே காவிரியின் கரை உடைப்புகளை கரிகாலன் அடைத்திருப்பான் . அவையும்   பயனின்றிப் போயின. இதனால் உறுதியான அணை கட்டுவதற்கான முயற்சிகளைக் கரிகாலன் மேற்கொண்டிருக்க  வேண்டும் என்றும் பொருள் கொள்ள, இப்பாடல் இடம்தருகிறது.

                      கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய  ”பட்டினப்பாலை”  யின் பாட்டுடைத் தலைவனாகிய கரிகால் வளவனின் ஆற்றல்களை..

மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான்வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனத்
தான் முன்னிய துறை போகலின் – 271 – 273.

                      திருமாவளவன், தெய்வத் தன்மை உடையவனாதலின் மலைகளையெல்லாம் அகழ்தலைச் செய்வான் என்றும் கடல்களை எல்லாம் தூர்த்தலைச் செய்வான் என்றும் தேவர் உலகத்தை மண்ணில் விழச் செய்வான் என்றும் காற்றை விலக்குவான் என்றும் உலகத்தார் பாராட்டும்படி, தான் கருதிய துறைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். இவ்வுரை, ஏதோ திருமாவளவனின் ஆற்றல்களைப் புனைந்துரைத்த புகழுரைகள் போலத் தோற்றம் பெற்றுள்ளது. -----தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக