சனி, 23 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –150 : 48. காவிரியில் கல்லணை


தொல்தமிழர் அறிவியல் –150 : 48. காவிரியில் கல்லணை

வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் இறந்து ஒலிக்கும்மலைபடு. 474 – 475

 சேயாறு  - ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் .
 தலைவாய்வாய்த்தலைமதகு.

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்புஇல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்றுஎனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாக
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே
--முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  236 – 248

                சோழ நாட்டில்கடுங்கோடையில் பயிர்கள் கருகவும்அருவி நீர் இல்லாது ஒழியவும் - முகில்கள் கடல் நீரை முகத்தலை மறந்தொழியவும்இவற்றால் பெரிய வற்கடம் (பஞ்சம்) உண்டாகும் . அத்தகைய காலத்தும் நறைக்கொடியும் நரந்தம் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவற்றை நீர்த்துறைதோறும் இட்டுஇளைப்பாறிப் பின் மேலும் நடந்து செல்லும் இயல்புடையது காவிரிநுரையைத் தலையிலேயுடைய ஆரவாரம் பொருந்திய தன் வெள்ள நீர் கரை சூழ்ந்த குளங்களிலும்பிற நீர்நிலைகளிலும் புகுந்தொறும்நீர் விளையாடலை விரும்பும் மகளிர் விரைந்து சென்று அவற்றில் குடைந்து விளையாடுவர்- உழத்தியர் தம் உடல் வளைந்து குனிந்து நின்று அரிவாளால் முதிர்ந்து விளைந்த நெற்றாளை அரிந்துதாள் அரிந்து திரட்டிய சூட்டினைச் சுமையாகக் கட்டிக்கொண்டுபோய் மலையாகப் போராக்கிநாள்தொறும் கடா விட்டு (பிணையலடித்து) மலையெனக் குவிப்பர்அள்ள அள்ளத் தொலையாத அந்நெற்பொலி நன்கு தைத்த மூடைகளிலே குதிர் முதலியவற்றில் இடமின்மையால் யாண்டும் கிடக்கின்ற செந்நெல் விளைகின்ற வரம்பு கட்டப்பட்ட  - ஒரு வேலி நிலம் ஆயிரங்கல நெல் விளையும்படி காவிரியாற்றால் வளமாக்கப்படுகின்ற நாடு முழுவதும் தனக்கே உரிமையுடையதாய தன்மையன் கரிகாலன்.

                                               கரிகாலன் காவிரியின் குறுக்கே அணை கட்டியதற்கான சான்று யாண்டும் காணப்படவில்லை - ஆயின் மேற்சுட்டிய கருத்துக்களைக் கொண்டு பார்க்கும்பொழுது - கடுங்கோடையிலும் நீர் நிலைகள் நிரம்பியிருந்தன விளைநிலங்கள் செழித்திருந்தன -  காவிரி ஆற்றின் வளம் முழுவதையும் கரிகாலனே கொண்டிருந்தான் என்பதால் காவிரியைக் காத்துச்( அணை கட்டி) சோழ நாட்டை வளமாக்கினான் என்பது சொல்லாமலே விளங்குமன்றோ..! -----தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக