தொல்தமிழர் அறிவியல் –136 : 46. தொல்காப்பியம் – புள்ளி
எபிரேயம்
எபிரேய
மொழியைச் செம்மைப்படுத்திய யூதர்கள் உயிர் ஒலிப்புக்கு
ஏற்றவாறு புள்ளி
, சிறுகோடு ஆகியவற்றை
எழுத்துக்களில் உயிர்க்குறி
(Vowel points) இட்டு எழுதினர்.
எழுத்துக்களின் நடுவில்
புள்ளிபெறும் எழுத்துக்கள்
ஒலிப்பில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
இலத்தீன்
இலத்தீன்
நெடுங்கணக்கில் எழுத்தின்
மேல் / கீழ் புள்ளி இடம்
பெறுகிறது. ஆயின் அது பொருட்சிறப்பைப் புலப்படுத்துவதாக இல்லை. இஃது ஆங்கிலத்தில் ஐ
– ஜெ.(
I,j ) எழுத்துக்கள்மேல் இடம்பெறும்
புள்ளியைப் போன்றதே.
பதின்ம முறை –
பதின்ம
கூற்றுப்பின்னங்களைக் (Decimal fraction ) குறிக்க ஒரு புள்ளி
இடுவர். ஓர் எண்ணின் இடப்பக்கம்
புள்ளியிருப்பின் அது
பத்தின் பகுதியாகக்
கொள்ளப்படும். இது
, முழு எண்ணைப்
பின்னமாகக் காட்டவே
0.5 = 5/10 இதிலிடப்பட்ட புள்ளிக்குப்
பதின்முறைப் பின்னக்குறி ( Decimal point) ஆகும். இக்கணக்குமுறை இந்தியாவில் தோன்றிப்
பல மாறுதல்களுக்கு உட்பட்டு மற்ற நாடுகளுக்கும்
பரவியது. எண்களில் மேற்புள்ளியிட்டு அவற்றின்
மதிப்பைக் குறைத்தமுறை கி.மு.
1700 இல் எகிப்தியர்களிடம் இருந்ததை அறிய முடிகிறது.
அதாவது 3 மூன்றின்மேல் ஒரு
புள்ளி இருந்தால்
அது
1/3 இருபுள்ளிகளின் கீழ்
மூன்று இருந்தால்
அது
2/3 ஆகும். ( D.E.Smith, J.Ginsburg. The world of
Mathematics p.168) தமிழைப்போல மேற்புள்ளி எண்ணில்
இடம்பெற்று மதிப்புக்
குறைப்பு நடந்துள்ளது.
தமிழில் எண்களை
எழுத்தால் எழுதுதல்
( Notation) என்ற முறை
இலக்கண இலக்கியங்களில் பெருவழக்கு. தொல்காப்பியத்தில் “ அந்நாலைந்தும்
மூன்று தலையிட்ட
“ என்றால் 4 x 5
+3 = 23 என்றவாறு பெருக்கல்,
கூட்டல், கழித்தல், வகுத்தல் முதலியனவும்
இடம்பெற்றுள்ளன.
சீன மொழியில் 11 என்பதைக்குறிக்க 10+1 என்று இருந்துள்ளது.
தமிழிலும் 11 என்பது ( யக)
10+1 என்றே குறித்தனர்.
தமிழர்களைப்போல தொல்ரோமானியர்களும் பேரெண்களைக் குறிக்கக் குறியீடுகளைக்
கொண்டிருந்தனர்- ( ய
= 10 ; X = 10 )
சிந்துவெளிக்
கணக்கு
தமிழி
– கி.மு
3ஆம் நூற்றாண்டைச்
சார்ந்ததாகக் கருதப்படும்
காசர்கோடு மாவட்டம்
கரடுக்காட்டுப் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு
ஒன்று 14 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு,
புள்ளிகளுடன் எழுதப்பட்டுள்ளது. ----தி இந்து:
15-03-14.
” சிந்துவெளி
அகழாய்வில் கிடைத்துள்ள
சான்றுகளை நோக்கின்
– சிந்துவெளி மக்கள்
நடைமுறைக் கணக்குவழக்குகளில்
(Practical Mathematics ) தேர்ந்தவர்களாக இருந்துள்ளதை அறிய
முடிகிறது. அவர்கள் தயாரித்த செங்கல்லின்
கனபரிமாணம் 4 : 2 : 1 என்ற
அளவைத் துல்லியமாகக்
கொண்டுள்ளது. மேலும்
நிலைப்படுத்தப்பட்ட சிற்றளவைகளாக
1/20, 1/10, 1/5, ½, 1,2,5,10,50,100,200,500 போன்ற
நிறுத்தல் அளவைகளையும்
கொண்டிருந்தனர்.” --- விக்கிபீடியா.
” பாழெனக் காலெனப்
பாகென வொன்றென
“ ( பரிபா.6 : 77) என்பது
0,1/4, ½, 1 என்பது எண்களின் சங்க
இலக்கியப் பதிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக