ஞாயிறு, 1 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-1

தன்னேரிலாத தமிழ்-1

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.” வெற்றிவேற்கை.
அகர முதல எழுத்தென அகரம் சுட்டிக் எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியரே தொழத்தகும் / வணக்கதிற்குரிய  இறைவன் வார்.

”முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று….”
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்….”
”வையதுள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள்…” மேற்சுட்டியுள்ள மூன்று குறட்பாக்களில் இடம் பெற்றுள்ள 

இறைவன், தெய்வம் என்னும் சொல்லாட்சிகளைக் காண்க.
இறைவன் – வணங்கத் தக்கவன்
தெய்வம் – தொழத்தக்கது , என்றவாறும் பொருள் கொள்ளலாம்.

இவர்க்கு இவர் தெய்வம் ஏனத் தொழத்தகும் தெய்வங்களாக

குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் அறிவோர்க்குத்
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை.” –நீதிநெறிவிளக்கம்.

கற்பிற் சிறந்த ஒழுக்கமுடைய பெண்ணுக்கு அவள் கணவனும்.பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களும் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களுக்கு அவர்களுடைய ஆசிரியர்களும் முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு இறைவன் எனப் போற்றத்தக்கவர் என்பதாம்.

அன்னையே தெய்வம் என்று அறிவாய் மனமே..!

ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்.” ---நான்மணிக்கடிகை.
பெற்றவளைக் காட்டிலும் நினைந்து போற்றத்தக்க தெய்வம் எதுவும் இல்லை.

ஓர் அருமையான திரைப்படப் பாடல் ஏழிசை மன்னன் எம். கே. தியாகராச பாகவதர் பாடியது …

“அன்னையும் தந்தையும் தானே பாரில்
அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்… ” --கேட்டு மகிழுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக