வியாழன், 26 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-22


தன்னேரிலாத தமிழ்-22

செய்பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு இனையன
தெய்வத்துத் திறன் நோக்கி தெருமரல்தேமொழி
 வறன் ஓடின் வையத்து வான் தரும் கற்பினாள்.” கலித்தொகை.

தேமொழி...! செய்வினையாற் பெறுகின்ற பொருளின் சிறப்பை எண்ணிப் பிரிந்து சென்றவர் பொருட்டுத்  தெய்வத்தின் அருளை வேண்டி மனஞ்சுழலுதல் வேண்டாம் ; வறட்சி மிகுந்து உயிர்கள் துன்புறும் காலத்து, மழையைப் பெய்விக்கும் கற்புடையாளே..!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக