வெள்ளி, 20 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-18


தன்னேரிலாத தமிழ்-18

நிலையாமை…!

இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
 வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
 மிக்க அறமே விழுத்துணை ஆவது.” --- மணிமேகலை.

 இளமையும் நில்லாது கழியும்;  யாக்கையும் நில்லாது ஒழியும்; வளமிக்க பெருஞ் செல்வமும் நிலைத்து நிற்காது ; துறக்க உலகினைப் புதல்வரும் கொண்டுவந்து கொடுத்துவிடார்  ; ஆதலின் அறம் ஒன்றே உயிருக்குச் சிறந்ததோர் துணையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக