ஞாயிறு, 29 மார்ச், 2020

மும்முனை மருத்துவம் - ஓமியோபதி மருத்துவம்:


மும்முனை மருத்துவம் - ஓமியோபதி மருத்துவம்:

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்கொரானா நச்சு உயிரி.  மக்கள் தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள ஓடி ஒளிகின்றனர்; காப்பாற்றுவாரின்றி காற்றினும் கடுகிப் பரவி வருகிறது. மண்ணை அழித்து வின்ணை அளக்கும் அறிவியல், இந்நோய் நீக்கும் மருந்து அறியாது திகைத்து நிற்கின்றது. இந்நிலையில் மூன்று மருத்துவ முறைகள் குறித்து மருத்துவர்களிடையே கருத்துப்  (மோதல்கள்) பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மும்முனை மருத்துவம்
1.  சித்தர் மருத்துவம், 2. ஓமியோபதி மருத்துவம் 3. அலோபதி மருத்துவம்.

ஓமியோபதி மருத்துவம்:

 உலகின் தலைசிறந்த முருத்துவ முறைகளுள் ஓமியோபதிக்குத் தனி இடமுண்டு.  ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் எஃப்.சி. சாமுவேல் ஃகனிமான் (1755-1843).
இவர் தன்னுடைய 24 ஆம் வயதில் அலோபதி மருத்துவத்தில் எம்.டி, பட்டம் பெற்றார். அலோபதி மருத்துவமுறையில் நோயுற்றோர் துயர் உறுவதைக் கண்டு,மனமழிந்து மருத்துவத்தொழிலை விடுத்து, மொழிபெயர்ப்புப் பணிக்குச் சென்றுவிட்டார். ஆயினும் அவர் மனம் நோயாளிக்குத் தொல்லை இல்லாமல், நோய் நிரந்தரமாகக் குணமளிக்கக் கூடிய  வழியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டேயிருந்தது. அதன் விளைவாக,
1790 ஆம் ஆண்டு ஒரு மருந்துக்கு (கொய்னா) தன்னையே சோதனைக் களமாக்கி,மாபெரும் உண்மை ஒன்றினைக் கண்டுபிடித்தார்.
 எந்த ஒரு பொருள் மிகுவினால் நோய் செய்கின்றதோ அதே பொருளை வீரியப் படுத்தி / அணுவாக்கிச் சிறிதளவே உண்ணும்போது அந்நோய் நீங்கிவிடுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். 1796இல் ஃகனிமானால்  கண்டுபிடித்து வெளியிடப்பட்ட மருத்துவ முறையின் பெயர், ’ஓமியோபதி’ –(Homeopathy : Treating a disease by very small doses of drugs.)
இம்மருத்துவமுறை முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்றது. ஓமியோஒத்தது , எந்த ஒன்றினால் நோய் தோன்றியதோ அந்த ஒன்றினாலேயே அந்நோயை நீக்குவது (Similia –Similibus – Curentur) என்னும் முறைமையை அடிப்படையாகக் கொண்டது.
மருந்துகள்
ஓமியோபதி மருந்துகளின் மூலப்பொருள்கள், மூலிகைகள்,( முசுமுசுக்கை, வல்லாரை கற்றாழை...) கனிமங்கள் (பொன்,வெள்ளி, பாதரசம், உப்பு...), விலங்குகள்(நாய்ப்பால், சிலந்தி, பாம்புநஞ்சு,..) நோய்க்கழிவுகள் (சீழ், நெஞ்சுச்சளி..)
தடுப்பு மருந்துகள்
   ஓமியோபதியில், சூழ்நிலைக்கேற்பப் பல்வேறுகாரணங்களால் மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்களுக்குரிய தடுப்பு மருந்துகள் உள்ளன.
அம்மை, வாந்திபேதி, தாளம்மை, கக்குவான் இருமல், மலேரியாவைப் போன்ற முறைக்காய்ச்சல்......இன்னபிற.
மருத்துவத்தின் சிறப்பு
.”..............ஓமியோபதி முறையில் மட்டும்தான் ஆரோக்கிய நிலையில் உள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இந்த மருந்துப் பொருட்களைக் கொடுத்து, அதன் விளைவுகளைக் கேட்டறிந்திருக்கிறார்கள்.”
ஓமியோபதி மருந்துகள் ஆற்றல் வாய்ந்தவை. ஒரே மருந்து மிகக் குறைந்த அளவு (Single Remedy – Minimum Dose)   என்பது ஓமியோ தத்துவம்.  ஒவ்வொரு மருந்தும் தனித்தனியாக மெய்ப்பிக்கப்பட்டது. இதுவரை ஒரு மருந்து கூடப் பயனற்றது என்றோ, தீங்கு தருவது என்றோ நீக்கப்பட்டது கிடையாது.”
எல்லை வரையறை
 எல்லாவற்றையும் தீர்க்கும்என்ற ஒரு மருத்துவமுறை  உலகில் இல்லை ; எல்லாவற்றிலும்  இயலாதுஎன்ற எல்லைவரையறை உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

ஓமியோபதி மருத்துவம் வெற்றி பெற, மருத்துவர் நோயாளி ஆகிய இருவருக்கும் அறிவும் பொறுமையும் கட்டாயம் தேவை. மருத்துவர் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

  உலகில் மிகவும் மலிவான மருந்து ; எளிதாக எங்கும் கிடைக்கக்கூடியது  ; எடுத்துக் கொள்வதற்கும் இயைபு உடையது ; அளவிலும் ஆற்றலிலும் நுண்ணியது ;மனிதரிடம் சோதனை செய்து மெய்ப்பிக்கப்பட்டது ; பக்கவிளைவுகள் அற்றது ; நோயை நிரந்தரமாகக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

ஓமியோபதியில் அன்று முதல் இன்றுவரை பல தடுப்பு மருந்துகளை  மருத்துவர்கள் பயன்படுத்திவருகின்றனர்; மக்களும் பெரும்பயன் பெற்று வருகின்றனர் என்பதையும் காணமுடிகிறது.

உலக அளவில் மக்கள் மருத்துவமாக கொண்டாடப்பட வேண்டிய தகுதியும் சிறப்பும் உடையது  ஓமியோபதி மருத்துவமே.

ஓமியோபதியில் கொரோனா தடுப்பு மருந்தாக வல்லுநர்கள் பரிந்துரைப்பதைப் பல்துறை அறிஞர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
அலோபதிமருத்துவம்.....தொடரும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக