தன்னேரிலாத தமிழ்-3
அகப்பாடல்கள்
“ ஓவியப் புலவன் வண்ணமும் கிழியும் கொள்வது போன்று, இயற்புலவன்நல்லியல்புடைய
நால்வகைச் சொற்களையே கொண்டு தான் உணர்ந்த அழகெல்லாம் தன் செய்யுளைப் பயில்வோரும் உணரும்படி
இனிய செய்யுளாகப் புனைந்து தருகின்றான். எனவே, செய்யுள்கள் அழகுப் பண்பின் பிழிவுகளே
ஆகின்றன.”
--பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.
சங்க இலக்கியப்பாடல்கள் மொத்தம் 2381 ஆகும். அவற்றுள் 1863 பாடல்கள் அகத்துறையைச்
சார்ந்தனவாகும்.
அகத்தில் 378 புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள் ஒரு பாடல் மட்டும் பாடியவர்கள்
249 புலவர்கள்.
அகப்புலவர்கள் வரிசையில் சிறப்பிடம் பெறும் ஆண்பாற் புலவர் கபிலர், 197 பாடல்களைப்
பாடியுள்ளார். சிறப்பிடம் பெறும் பெண்பாற் புலவர் ஒளவையார் 26 பாடல்களைப்
பாடியுள்ளார்.
இவ்விருவரும் ஐந்து திணைகளிலும் பாடியுள்ளனர்.
“புணர்தல், பிரிதல் முதலிய ஐந்திணை யொழுக்கத்தின் அரிய குறிக்கோளையும் அதனால்
விளையும் அறப்பயனையும் கண்ட சான்றோர் தாம் பாடும் பாட்டுக்களிலெல்லாம் அகவொழுக்கத்தையே
பெரிதும் எடுத்துப் பாடினர். மேலும் இவ்வகப் பொருட் காட்சியும் அறிவும், அறம் புரிந்தொழுகும்
தூய மக்கட் சமுதாயம் தோன்றுவதற்கு இன்றியமையா எனக் கண்டதனால், இதனை வழக்கு நூன் முறையிற்
கூறுவதே புலநெறி என்று மேற்கொண்டனர்.” –
---ஒளவை சு.
துரைசாமிப்பிள்ளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக