சனி, 28 மார்ச், 2020

மும்முனை மருத்துவம்


மும்முனை மருத்துவம்

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்கொரானா நச்சு உயிரி.  மக்கள் தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள ஓடி ஒளிகின்றனர்; காப்பாற்றுவாரின்றி காற்றினும் கடுகிப் பரவி வருகிறது. மண்ணை அழித்து வின்ணை அளக்கும் அறிவியல், இந்நோய் நீக்கும் மருந்து அறியாது திகைத்து நிற்கின்றது. இந்நிலையில் மூன்று மருத்துவ முறைகள் குறித்து மருத்துவர்களிடையே கருத்துப்  (மோதல்கள்) பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மும்முனை மருத்துவம்

1.  சித்தர் மருத்துவம், 2. ஓமியோபதி மருத்துவம் 3. அலோபதி மருத்துவம்.

சித்தர் மருத்துவம்:
இஃது ஓர் இயற்கை மருத்துவம். உடலியங்கியலுக்கு ஊறு விளைவிக்காத மருத்துவமுறை. உண்மையில்  நோய்க்குரிய மருந்தாக மட்டுமின்றி நோய் அண்டாது தடுக்கும்;  உடல் வளத்தை, நலத்தைக் காக்கும்(Prevention is better than cure) மருத்துவமாகும். சித்தர் மருத்துவம் தற்காப்பும்’,  தடுப்பும்எனும் இரண்டு நிலைகளில் செயற்படுகிறது எனலாம்.

சித்தர் மருத்துவத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. பன்னெடுங்காலமாக மக்களிடையே பேரும் புகழும் பெற்ற மருத்துவம். மக்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்த காலந்தொட்டு இன்றளவும் நின்று நிலவும் ஆற்றல் பெற்றது. எத்தனை கோடி மருத்துவச் சோதனைகளை வென்று வந்ததோ..! உலகில் மண்ணுக்கேற்ற மருத்துவம் இஃது ஒன்றே எனில் மிகையன்று.

இன்றைய அறிவியல் உலகில் இம்மருத்தும் ஏற்புடையதாகுமா? என்பது தொழில் முனைவோர் பலரின் வினாவாகும். இவர்கள் சித்தர் மருத்துவம்   நோய்க்கு எதிராகச் செயல்படுமா ? என்பதை ஆராய்ந்து அறியும் ஆற்றல் அற்றவர்களாகவே இருக்கின்றனர்.  எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் மக்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். நோய்க்குரிய சரியான  மருந்தாக இல்லையென்றாலும் நோயுற்றோரின் உயிர் ஊக்கியாக, இம்மருத்துவம் செயல்படக் கூடும்.

அஃதாவது பிற மருத்துவ மருந்துகளை ஏற்றுச் செயல்படக்கூடிய ஊக்கியாக அமையுமா என்பதை மும்முனை மருத்துவ அறிஞர்கள் கூடி முடிவெடுக்க வேண்டும்.

சித்தர் மருத்துவமுறையின் அருமை பெருமைகளை விரித்துரைக்க இஃது இடமன்று.

சான்றுக்கு ஒன்று

இன்று உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோயாக நீரிழிவு நோய் மக்களை வாட்டிவதைக்கிறது. இந்நோய்க்குரிய அரிய மருந்துபொங்கொரந்திஎன்னும் மூலிகையாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள சருக்கரையை உறிஞ்சும் ஆற்றல் கொண்ட இந்த மூலிகையின் மதிப்புணர்ந்த சீன நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளதை அறிந்த பேராசிரியர் ஜி.பி. டூபே தமிழர்களின் அரிய சொத்தாகிய இம்மூலிகை தமிழ்நாட்டிற்கு உரியதென்று, தமிழ் இலக்கியச் சான்றுகளையும் காட்டிக் காப்புரிமை பெற்றுச் சித்தர் மருத்துவத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

“Salacia Oblonga  also called Ponkoranti is a medicinal herb believed to be native to India and SriLanka. It is used to treat type 2, diabetes in ayurveda because it contains a molecule called Salacinol which prevents the body from absorbing the sugar from foods consumed.

Recently Professor G.P. Dubey  won an international patent for the herb proving that it originated in India Salem district  in Tamil Nadu to be specific.

‘I started the research into the plant when I heard a Chinese company applying to patent it. Then we managed to prove it through  DNA finger printing and evidence in Tamil literature, ..said Professor Dubey...” Times of India :18/2/17.

இனி இந்த உலகம் என்னாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  நாம் இயற்கையை விட்டு  வெகுதொலைவு சென்றுவிட்டோம் ; ஓடி ஒளிந்த இடத்தில்  உண்மை உறங்கிக் கிடக்கிறது. தமிழன் மருத்துவத்தைத்  தொழிலாகச் செய்யாமல் தொண்டாகவே செய்தான் ; அதனால் அதன் அருமை புரியாமல் போயிற்று.

பேராசான் திருவள்ளுவரின் மருந்து அதிகாரத்தைப்(95) படித்துப்பாருங்கள் அறிவு தெளிவு பெறும்.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.’ –637.

அன்புடையீர் நான், மருத்துவன் அல்லன்; படித்தவற்றைப் பகிர்ந்துள்ளேன். குறை இருப்பின் சுட்டுங்கள் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
ஓமியோபதி மருத்துவம் ...தொடரும்.

1 கருத்து: