தன்னேரிலாத தமிழ்-2
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து
வரூஉம் மேவற்றாகும்.” தொல்காப்பியம்.
இன்பம் என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும்
பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும்.
உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும்
பருவம் எய்தி உய்த்துணரும் பாலுணர்வால் உந்தப்படுவதால் இன்பம் துய்த்துப் பல்லுயிரும்
படிநிலையில் வளர்ச்சி பெருகின்றன. இதனால் இன்பம் என்பது உயிர் இயற்கையாகும் என்பதை
தொல்காப்பியர் உற்று நோக்கி உணர்த்தியுள்ளமை அறிவியல் உண்மையாகும்.
ஓரறிவு (புல், பூண்டு,மரம்) முதலாக ஆறறிவு (மக்கள்)ஈறாக
அனைத்தும் இன்ப விழைவோடு பொருந்தியே வாழ்கின்றன.
தொல்காப்பியர்…
;ஆறறிவதுவே
அவற்றொடு மனனே’- என்று கூறுவதோடு,
‘மக்கள் தாமே
ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’ , என்றும் கூறுவார்.
மக்கள் தம் இன்ப விழைவில் ஆடவர்,
பெண்டிர் காதல் என்பது பருவத்தே வெளிப்படும் ஓர் உளவெழுச்சியாகும். காதல் ஒழுக்கத்தில்
ஈடுபடும் ஆண், பெண் மனநிலைகள் எளிதில் புறத்தார்க்குப் புலப்படா. அதனாலன்றோ இதனை ’அகம்’
என்றனர். இவ்வொழுக்கம் அகத்திணை எனப்படும். இவ்வொழுக்கத்தினை விரித்துப் பேசும் சான்றோர்
செய்யுட்கள் ; அகப்பாடல்கள் ஆகும்.
அகப்பாடல்கள் பாலியல் செய்திகளை
அறிவியல் முறையில் விளக்குகின்றன,
“ அகத்திணை
ஓர் பாலிலக்கியம். பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காம நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறோம்.
காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும் இயற்கை, செயற்கை, திரிபு ஆகிய மனக் கூறுகளையும்
கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல்.” –டாக்டர் வ.சுப. மாணிக்கம். 2/3/20
அருமை. நல்ல தொகுப்பு. தொடருங்கள், தொடர்வோம்.
பதிலளிநீக்குதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது தன்னேரிலாத தமிழ்-2 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்