தன்னேரிலாத தமிழ்-19
நன்மைதரும் நட்பு…!
”தாளாளன் என்பான்
கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.” திரிகடுகம்.
தாளாண்மை என்னும் முயற்சி உடையான் கடன்படாமல் வாழ்பவன்; வேளாளன் என்பான்
வந்த விருந்தினர் பசித்துஇருக்கையில் தனித்து உண்ணாதான்; பிறர் மனத்தை அறிந்து கொள்ளும் தன்மை உடையவன் கேட்டவற்றை
மறவாதான்; இம்மூவரையும்
ஒருவன் தனக்கு நட்புடையவானாகக்கொண்டு வாழ்தல் நன்மை தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக