வெள்ளி, 13 மார்ச், 2020


தன்னேரிலாத தமிழ்-12


நாடகப் பாங்கான அகப்பொருள் புனைவுமுறையில் கதைக் களனில் கதை மாந்தர் பலரும் இடம்பெறுவர். ஐவகை நிலனும் கதக் களனாகும். கதை மாந்தர்களாகத் தலவன், தலைவி, தோழி,  நற்றாய், செவிலி, பரத்தை, பாங்கர், தேர்ப்பாகன்,வாயிலோர், பார்ப்பார், கேட்குநர் முதலியோரவர்,

அகமரபு, ஐந்திணை ஒழுக்கங்கள் எல்லா மக்களுக்கும் பொதுவாக இருப்பதால், மாந்தர்  எவர் பெயரும் சுட்டப்பெறாது பாடல் புனைதல் வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

 மக்கள் நுதலிய அகனைந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெற்றார்.’

சுட்டி ஒருவர் பெயர் பெறாது என்றதனால் அகப்பொருள் பாடும் இலக்கிய நெறியைக் கூறியுள்ளார்.

தலைவன், தலைவி

கதைத் தலைமக்களாகிய தலைவன், தலைவி ஆகியோர் இயல்பைச் சுட்டும் தொல்காப்பியர்.

ஆடவர் இயல்பு

பெருமையும் உரனும் ஆடூஉ மேன,’

பெருமையும் வலிமையும் ஆடவர் இயல்பு. அறம், பொருள், இன்பம் எனும் முப்பொருள் உறுதிப் பொருளாக உலகோர் உவந்து போற்றும் நற்குணங்கள் யாவும் நிறையப் பெற்ற உள்ளத்தவனாக,  அறிவிற்சிறந்தோனாயும் உடல் வனப்பும் ஒரூங்கே பெற்றிருப்பவனே காதல் தலைமகன்.

பெண்டிர் இயல்பு.

‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப.’ –
அச்சம், நாணம், மடன் எனும் முப்பண்புகளும் முந்துறுதல் எக்காலத்தும் பெண்டிர்க்கு உரியவை என்பார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக