வெள்ளி, 6 மார்ச், 2020


தன்னேரிலாத தமிழ்-6
மேற்சுட்டிய உரைவழி, தொல்காப்பியர், முற்றுமுழுதாக இயற்கை ஆராய்ந்து; இயற்கையியல் என்னும் அறிவியல் துறையைத் தோற்றுவித்து...

1.  இப்பொருளை  ’எட்டுவகையான் ஆராய்ந்தாரென்ப’ என்றது, -இயற்கையியல்.

2.  ’அகத்திணை,  புறத்திணை என இரண்டு திணைகளை வகுத்து’, என்றது – வாழ்வியல்.

3.  ’கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து,’ என்றது – ஒழுக்கவியல்.

4.  ’ஆசிரியம்,வஞ்சி, வெண்பா, கலி, பரிபாடல், மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, ’ என்றது – செய்யுளியல்.

5.  ’முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தலென நால்வகை நிலம் இயற்றி’, என்றது – நிலவியல்.

6.  ‘சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து,’ என்றது- காலவியல்.

7.  அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து,’ என்றது - புறனடையியல்.

8.   ’வழக்கிடஞ் செய்யுளிடமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின்,’ என்றது- மொழியியல்.

9.   எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர் முதல், கரு, உரியும் திணைதொறுமரீஇய பெயரும் திணை நிலைப் பெயரும் இருவகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்து வகைக் கேட்போரும் எட்டுவகை மெய்ப்பாடும் நால்வகை  உவமும் ஐவகை மரபும் என்பார்,’ என்றது – புனைவியல். ---தொடரும்.

1 கருத்து: