புதன், 18 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-16


தன்னேரிலாத தமிழ்-16

உயர்ந்த பொருளாகிய அருள்தான் யாரிடத்தும் இல்லாதது போலும்.

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.” ---திருமந்திரம்.

ஐவர்க்கு நாயகன் -ஐம்பொறிகளுக்குத் தலைவன்உயிர் .  ஐவர் வாழும் ஊர் – 

ஐம்பொறிகள் இருப்பிடம்உடல் . அவ்வூர்க்குத் தலைமகன்ஆள்பவன்மனம் . குதிரைஉயிர்ப்பு . உயிர் வளிமூச்சு.

  ஐம்பொறிகளுக்குத் தலைவன்,உயிர் ; ஐவர் வாழும்
ஊர், உடல் . மூச்சினை அடக்கி ஓக ஆற்றலால் எல்லாமாகிய
பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர். கடவுளைக் கண்டு
தெளிந்தவர்கள் என்றும் கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக