திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி – 19 - 21

நற்றிணை – அரிய செய்தி – 19
முருகு வழிபாடு
 காதலால் மெலியும் தலைவியைக் கண்ட தாய் – இவள் நோயுற்றாள் என்று கருதி வெறியாட்டு நிகழ்த்துவாள்.
 வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
 அன்னை அயரும் முருகுநின்
 பொன்னேர் பசலைக் குதவா மாறே.
நல்வெள்ளியார். நற். 47 : 9 – 11
 வெறிக்களம் அமைத்து வேற்படையை நிறுத்தி ஆட்டுக்கிடாயை அறுத்துச் செய்யப்படும் முருகு வழிபாடு; நின் பொன்போலும் பசலை நீங்க  உதவாது.
நற்றிணை – அரிய செய்தி – 20
பெருஞ் செல்வர்
 மழவர் பெருமகன் மாவள் ளோரி
 கைவளம் இயைவ தாயினும்
 ஐதே கம்ம இயைந்துசெய் பொருளே
நப்பாலத்தனார். நற். 52: 9 - 11

வெவ்வியப் போரைச் செய்யும் மழநாட்டார்க்குத் தலைவனும் ‘ பெரிய வண்மையுடையவனுமாகிய வல்வில் ஓரி என்பானது; கையகத்துள்ளது போலும் பேரளவிற்றாய செல்வம் எய்துவதாயினும் ;  நெஞ்சே  ! நின்னோடு கூடிச் சென்று செய்யும் அப்பொருள்  மெல்லியதேயாகும்……!

நற்றிணை – அரிய செய்தி – 21
மேனியில்  மத நாற்றம்
உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிளர் ஆகம் புல்லலின் வெறிகொள
பெருவழுதியார். நற். 55 : 3-4

   இரவுப் போதில் குறியிடம் போந்து ‘ தேமல் பரந்த இவளது மார்பை முயங்குதலால் ; இவள் மேனி மத நாற்றம் கமழ்தலின்….. ( இம்மணம் இவட்குப் புதிது புணர்ந்ததொன்று என்றும்  பண்டெல்லாம்  இவ்வாறு நாறுதல் இல்லையென்றும் எண்ணி – அன்னை வினா எழுப்பினாள் ) மருத்துவ அறியல் நோக்கில் ஆய்க.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி – 16 -18

நற்றிணை – அரிய செய்தி – 16 -18
வழிப்போக்கர் – உணவு
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஒய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு
அத்தம் செல்வோர்க்கு வல்சி யாகும்
எயினந்தையார். நற். 43 : 1  5
 வெண்மையான ஆடையை விரித்தாற் போல ஞாயிற்றின் வெயில் விளங்குவதால் உண்டான வெப்ப மிகுதியால் ; மூங்கில்கள் நெடிது வளர்ந்த மலைப் பக்கத்தில் ; மிக்க பசியினையுடைய செந்நாய் வாடிய மான் ஒன்றைக் கொன்று ; உண்டு கழித்த மிச்சிலாகிய ஊன் ; சேய்மையிலுள்ள நாடுகட்குச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உணவாகும்.
நற்றிணை – அரிய செய்தி - 17
மழையின் இயக்கம் காணல்
   …………. ……. …….. நீடிய
பன்மா உயர்சினை மின்மினி விளக்கத்துச்
சென்மழை இயக்கம் காணும்
நன்மலை நாடன் காதன் மகளே.
பெருங்கோசிகனார். நற். 44 : 9 – 12
  நெடிது உயர்ந்த மரங்கள் பலவற்றின் உயர்ந்த கிளைகளில் தங்கி மிளிரும் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் – வானத்திற் செல்லும் மழை முகிலின் இயக்கத்தைப் பார்த்துச் செய்வன தெளியும் நல்ல மலைநாடனின் அன்பு மகள்.
நற்றிணை – அரிய செய்தி – 18
காதல் மறுப்பு
தலைவா ! இவளோ சிறுகுடியில் வாழும்  - கடலில் மீன் வேட்டம் புரியும் பரதவருடைய மகள்….. நீயோ  தேரையுடைய   செல்வனுக்குச் செல்ல மகன்…..
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
உலோச்சனார். நற்.45 :  7 – 11
மீன்களை உலர்த்தும் போது அவற்றைக் கவர்தற்கு வரும் பறவைகளை ஓட்டிக் காவல் புரியும் எம்பால் அமைந்த அழகு யாது ; எமது மேனி புலால் நாறுவது காண்பாய்; ஆதலால் சென்றுவிடு; கடல் பொருள் கொண்டு வாழும் எமது சிறிய வாழ்க்கை நும் உயரிய வாழ்க்கைக்கு ஒத்ததன்று; எமது குடிக்கும் பெருமையுண்டு; நிரல் அல்லோர்க்கு நேர்படாமை ஆகிய செம்மை இயல்பும் எமக்குண்டு.. அறிக.


சனி, 29 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி – 13 - 15

நற்றிணை – அரிய செய்தி – 13 - 15
தனித்தோர் மன்று
முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலைப்
புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்து..
                                        இளவேட்டனார். நற்.33 : 2-3
முரம்பு நிலத்தே அமைந்த சிறுகுடியில் பரவிய மாலைப் போதில் தனித்தோர் கூடியிருந்து உண்ணும் பொலிவில்லாத மன்றத்தின்கண்..
 (முரம்பு – பரற்கற்களும் செம்மண்ணும் விரவிய நிலம் . மன்று – மன்றம் – பொதுவிடம் – மலைநாட்டு ஊர்களில் உள்ள பொதுவிடம்.)
நற்றிணை – அரிய செய்தி - 14
சிவந்த கண்கள்
……………………… மகிழ்ந்தோர்
தேங்களி செருக்கத் தன்ன
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே
அம்மூவனார். நற்.35 : 10-12
கள் உண்டோர்க்கு அக்கள்ளால் உண்டாகும் களிப்பு நிற்குங்காறும் கண் சிவந்து காட்டும் வேறுபாடு போன்ற -  காதற் காமக் களிப்போ இவள் கண் பசந்து தோன்றுதற்குக் காரணமாகும். ( கள் மிக உண்ணினும் காமக் கூட்டம் மிகினும் கண்சிவந்து காட்டும் என அறிக. கள்ளும் காமமும் மயக்குறுத்துவன. காண்க.- “ கடை மணி சிவந்த நின் கண்ணே… நற்.39.)
நற்றிணை – அரிய செய்தி - 15
புதல்வனைக் காணல்- புத்திரமுக தரிசனம்
 நள்ளென் கங்குற் கள்வன் போல
அகன்றுறை யூரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே
கோமால் நெடுங்கோடனார். நற்.40: 10 – 12
கன்ற நீர்த்துறையை உடைய ஊரனும் சிறந்த தந்தையின் பெயர் கொண்ட தன் மைந்தன் பிறந்தமைக்கு மகிழ்ந்து ……………
 மகன் முகத்தையும் மனைவி முகத்தையும்  நோக்குமிடத்துச் சுருங்கிய பார்வையுடையனாய்ச் சட்டென நீங்கினமையின் கள்வன் போல என்றும்.கூறினார்.

 மகப்பேறு  நிகழ்ந்த மனையைத் தூய்மை செய்து முற்றத்தே பந்தரிட்டுப் புது மணல் பரப்பி .மணி ஒலிக்க  மங்கல மகளிர் மகப்பெற்ற தாய்க்கு நெய்யாட்டீரணி செய்வர். தலைமகன் அக்காலத்தே தூய நீராடிச் சீரிய உடை அணிந்து பிறந்த புதல்வனைக் காண்பான். மகன் பிறந்தானைக் காணப் போந்த அதியமான் நெடுமான் அஞ்சியை உடனிருந்த மகளிருள் ஒருவராகிய ஒளவையார் பாடிய புறப்பாட்டு இங்கே நினைவு கூரத்தக்கது. இஃது இடைக்காலத்தே புத்திரமுக தரிசனம் என மொழிபெயர்க்கப்பட்டு வழக்கில் இருந்துவந்தமை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகின்றோம்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 10 - 12

நற்றிணை – அரிய செய்தி - 10
புலியின் இரை
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென்
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலிபார்த் துறையும் புல்லதர்ச் சிறுநெறி
பூதனார், நற்.29: 3-5
 குட்டி ஈன்ற பெண் புலிகாட்டில் காவல் செய்யஆண்புலி மாலை நேரத்தில் வழிச் செல்வாரைக் கொல்ல நோக்கியிருக்கும். அதன் வழியில் குறுக்கிடுவாரை வேட்டையாடும். புலி – மனிதரை உண்ணுமா ? ஆய்க.
நற்றிணை – அரிய செய்தி - 11
கண்ணீர்-வெம்மை
மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர்
கவலே முற்ற வெய்துவீ ழரிப்பனி
கொற்றனார், நற். 30 ;5,6
பரத்தையர் பலரும் நீ பிரிந்ததால் கவலையுற்று கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே. ஒப்பிடு- இமை தீய்ப்பன்ன… (குறுந்) துன்பத்திலும் /  இன்பத்திலும் வெளிவரும் கண்ணீரின் தன்மை – ஆய்க.
நற்றிணை – அரிய செய்தி - 12

கப்பல்-பன்னாடு
வேறு பன்னாட்டிற் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நக்கீரனார், நற். 31: 8,9
வேறாகிய பல நாட்டினின்றும் கலங்களைக் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலவை ஒத்த மணற்பரப்பில்...

கண்ணன் அவதாரம்,நற்.32

நற்றிணை – அரிய செய்தி - 7-9

நற்றிணை – அரிய செய்தி - 7
யானையை வீழ்த்திய பாம்பு
ஞால்வாய்க் களிறு பாந்தள் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல்
                                                      மாமூலனார், நற்.14: 8,9
  தொங்குகின்ற வாயையுடைய களிற்றுயானை பெரும்பாம்பின் வாய்ப்பட்டதாக, சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிரும் பேரொலியானது... யனையைத் தாக்குமா பாம்பு –ஆய்க. பாந்தள் – பாம்பு.
நற்றிணை – அரிய செய்தி - 8
பல் பதித்த கதவு
………………………… மூவன்
முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்
பொய்கையார், நற்.18 : 3,4
தொண்டித் திருநகர்சேரன்பகைவன் மூவன்  -போரில் வென்று பற்களைப் பிடுங்கிவைத்து இழைத்தவாயிற்கதவு.( பகைவரை அட்டு அவர் பல்லைக்கொணர்ந்து தமது கோட்டைவாயிற் கதவில் வைத்துத் தைத்தல் பண்டை வழக்கு இதனை, கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில், மத்தி அகம்.210 )
காட்டுக்கோழி- நாங்கூழ்இரைகொள்ளுதல், நற்.21 ( உதுக்காண்- உங்கே பாராய்)
நற்றிணை – அரிய செய்தி - 9
தைந்நீராடல்
………………….நோன்பியர்
கையூ ணிருக்கையின் தோன்றும் நாடன்
……………………….. நற். 22: 6,7
நோன்புடையார் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போல….

புள்ளி- குதிரின் உறைக்கிடப்பட்ட எண்ணுதலமைந்த குறியீடு.- செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை- நற்.26

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 6

நற்றிணை – அரிய செய்தி - 6
உணவு-மருந்து
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கான் மத்த
கயமனார், நற். 12 : 1,2
 தயிர்ப்பானையில் முடை நாற்றம் தீர விளம் பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்- தாழியில் கயிறாடித் தேய்த்ததாலே தேய்ந்த தண்டினை உடைய மத்திட்டு...
இம்முறை இன்றும் உண்டோ ? சித்த மருத்துவ முறை என்பர்- ஆய்க.

( குழிசி – தாழி. பானை)

நற்றிணை – அரிய செய்தி – 3 - 5

நற்றிணை – அரிய செய்தி – 3 - 5
                                                           தாவரவியல்
தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி யாகும்
                                                      பரணர், நற். 6 : 7, 8
சுரத்தில் உள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து அங்கே குதித்து விளையாடும் இளமானுக்கும் வெறுப்பில்லா உணவாகும்.( குமிழம் பழம்)
மதன் – அழகு ; வல்சி - உணவு
நற்றிணை – அரிய செய்தி - 4
                                                      தழை ஆடை
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
........................., நற்.8:2
பல பூக்களால் மாறுபடத் தொகுக்கப்பட்ட தழையாடை அசைய உருத்த அல்குல் அழகிய நீலமணி போன்றமேனி.... யாருடைய மகள் இவள்...... அழகிய இவளைப் பெற்ற தந்தையும் தாயும்........
யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர்
...............................................
திண்டேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே
                      தந்தை வாழ்க,  திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக.
நற்றிணை – அரிய செய்தி – 5
என்றும் காதலர் பிரியாமல் …..
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர
...................................., நற்.10 : 1-4

அழகிய கொங்கைகள் தளரினும் பொன் போன்ற மேனி கருமணி போலத் தாழினும் நல்ல நெடுங்கூந்தல் நரைபடத் தோன்றினும் – இவள் முதிர்ந்தாள் என்று கருதி கைவிடாது பாதுகாப்பாயாக.என்றாள் தோழி.

புதன், 26 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 2

நற்றிணை – அரிய செய்தி - 2
                                                          நிமித்தம்
கானலம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
                                               அம்மூவனார், நற்.4 : 1-3
பரதவர் புன்னை நிழலிலே தங்கி கடற்பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம்( பதம்) பார்த்து….

சகடம் – வண்டி ; ச எழுத்தினை முதலிற் கொண்டமைந்த அரிய சங்கச் சொல்லாட்சி.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 1

நற்றிணை  அரிய செய்தி – உரையாசிரியர்கள் :-
 உரை வேந்தர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை
 முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
நற்றிணை – அரிய செய்தி - 1
                                            பாண்டில் ஆடல்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
                                        இளங்கீரனார், நற். 3 : 2-4
வேம்பினது புள்ளி போன்ற நிழலின்கண்ணே கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள் பாண்டிலாடா நிற்கும்.
கட்டளைக் கல் – பொன்னை உரைத்து மாற்றுப் பார்க்கும் கல்.
பாலை- இண்டங்கொடியுடனே ஒருசேரப்படர்கின்ற ஈங்கையையுடையவாகும்ஈந்தின்ஈத்தமரங்கள்-2


அரிய நூல்கள் வரிசை –1: 36 முதல் பதிப்பு – 1925

அரிய நூல்கள் வரிசை –1: 36 முதல் பதிப்பு – 1925
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
786
நபிகனாயக
திருவவதாரத் தீபிகை
************************
இஃது
காரைக்கால்
கா. இப்ருஹீம் ஸாஹிபு அவர்கட் புதல்வர்
முஹம்மதப்துல் காதிரவர்களால்
இயற்றப்பட்டு
மேற்படியூர்
ஸ்ரீமான் இ. மெ. அவர்களின் கிரக
மெளலிது மஜ்லிஹிற் படித்து
அரங்கேற்றப்பட்டது
********************
காரைக்கால்
“ ஸ்ரீ புநிதா” அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
ஹி. பி. 1344 )                   ( கி. பி. 1925
அரிய நூல்கள் வரிசை – பகுதி – 1
முற்றும்
நற்றிணை அரிய செய்திகள் தொடரும்……



புதன், 19 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 35 முதல் பதிப்பு – 1897

அரிய நூல்கள் வரிசை –1: 35 முதல் பதிப்பு – 1897
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
ஓம் குஹப்பிரம்மணே நம:
பரிபூரணாநந்தபோதம்
******************
தேவைப்பதியெனுந் திருவீராமேச்சுரத்தைச் சேர்ந்த
பாம்பன்
சா. அப்பாவுபிள்ளையாகிய
குமரகுருதாசர் அவர்களால்
அருளியது
*************
இஃது
திருமூலர்மரபிலெழுந்தருளிய
ஞானசுந்தரசுவாமிகளின் சிஷியவர்க்கத்து ளொருவராகிய
மண்ணிப்பாக்கம்
அப்பாதுரைமுதலியார்வேண்டுகோளின்படி
சென்னை:
மநோன்மணிவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
முதற்பதிப்பு 500 பிரதி.
1897
*************
இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்



செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 34 முதல் பதிப்பு – 1902

அரிய நூல்கள் வரிசை –1: 34 முதல் பதிப்பு – 1902
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
ஸ்ரீ ராமஜயம்
தில்லைவளாகம்
ஸ்ரீ வீரகோதண்டராமஸ்வாமி
உலா
**************
இது
கும்பகொணம் – டவுன் ஹைஸ்கூல்
முதல் தமிழ்ப்பண்டிதராகிய
பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர்
இயற்றியது
-----*********-----
கும்பகோணம்
ஜி.வெ.பத்துருசாமி செட்டியார்
அவர்களது
“ லார்ட் ரிப்பன் யந்திரசாலையில்”
பதிப்பிக்கப்பட்டது
***********
1902
விலை அணா- 4

இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்


அரிய நூல்கள் வரிசை –1: 33 முதல் பதிப்பு – 1920

அரிய நூல்கள் வரிசை –1: 33 முதல் பதிப்பு – 1920
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     

SOUTH INDIAN SHRINES
(ILLUSTRATED)
By
P. V. JAGADISA AYYAR
WITH A FOREWORD FROM
LORD CARMICHAEL
PRINTED AND PUBLISHED BY
THE MADRAS TIMES PRINTING AND PUBLISHING CO.. LTD.
1920
All Rights Reserved.                                     Price Rs. 5
இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்


திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 32 முதல் பதிப்பு – 1913

அரிய நூல்கள் வரிசை –1: 32 முதல் பதிப்பு – 1913
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
கணபதி துணை
திருக் கரச்சின்ன ஸ்தல புராணம்
என்னும்
கணி….. ……….
*****************************
இஃது
கும்பகோணம் அத்துவைதஸபாபண்டிதர்
பிரம்மஸ்ரீ க.ச. கிருஷ்ணசாஸ்திரிகளவர்களால்
மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்வசனத்துடன்கூட
பல சிவநேசர்களுடைய வேண்டுகோளின்படி
பொன்னிரை
K.  முத்துராமசிவாசாரியார் குமாரர்
M. இராமநாதசிவாசாரியார் அவர்களால்
***************************************
கும்பகோணம்
“சாரதா விலாஸ அச்சுக்கூடத்தில் “
பதிப்பிக்கப்பட்டு
கும்பகோணத்தில் பிரசுரிக்கப்பட்டது
பிரமாதீச    (வருஷம்)     வைகாசி  (மாதம்)
1913
இதன்விலை ரூபாய் 1-0-0

இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 31 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை

அரிய நூல்கள் வரிசை –1: 31 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
திருவாமாத்தூர்த்தலபுராணம்
************************
இஃது
ஸ்க்காந்தபுராணத்தினாகரககண்டத்துள்ளது
முருகதாசசுவாமிகளென்றும்
திருப்புகழ்ச்சுவாமிகளென்றும்
விளங்குகின்ற
ஸ்ரீமத்- தண்டபாணிசுவாமிகளாற்
றெய்வீகங்காரணமாகத் தமிழ்க் கவிகளாய்த்
திருவாய்மலர்ந்தருளப்பெற்றுப்
பலபத்தசனங்களின்முயற்சியாற்
சென்னை:
இந்து தியலாஜிகல் யந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
*************************
இதிற்பசுக்களின்மான்மியம்விஷேமாய்க்கலந்திருப்பதாற்
சதுர்வேதத்தைச்சேர்ந்த சட்சமயத்தோராலும்
விரும்பப்படும்
இதன்விலை ரூபா. க.
ரிஜிஸ்த்தர் செய்யப்பட்டிருக்கின்றது.


இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 30 முதல் பதிப்பு – 1946

அரிய நூல்கள் வரிசை –1: 30 முதல் பதிப்பு – 1946
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
திருச்சிற்றம்பலம்
சுவாநுபவத் திருவாக்கு
நூலாசிரியர்
ஸ்ரீலஸ்ரீ
முத்துராமலிங்க ஞானதேசிகரவர்கள்
கோவிலூர்
நவயுகப் பிரசுராலயம்
காரைக்குடி
1946

இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்


வியாழன், 13 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 29 முதல் பதிப்பு – 1925

அரிய நூல்கள் வரிசை –1: 29 முதல் பதிப்பு – 1925
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     

ஸ்ரீ
பெருந்தேவனார் பாரதம்
என்னும்
பாரத வெண்பா
உத்தியோக- வீடும – துரோண பருவங்கள்
ராவ் ஸாஹெப்
டாக்டர்  S . கிருஷ்ணஸாமி ஐயங்காரவர்கள்
( M. A..Ph. D.D..M. R. A. S..F.R. H. S..F. M. U..   )
எழுதிய ஆங்கில முன்னுரைக்குறிப்புடன்
**************************
பதிப்பாசிரியன்
மதுரைத் தமிழ்ச்சங்கத்து முதன்மாணவனும்
சென்னை – அடையாற்று நே.தி. காலேஜ் தமிழாசிரியனும்
ஆகிய
பண்டித அ. கோபாலையன்
*********************
”செந்தமிழ் மந்திரம்” புத்தகசாலை
மயிலாப்பூர்- சென்னை
இரக்தாக்‌ஷி (வருஷம்) பங்குனி ( மாதம்)
( 1925 )
பதிவு செய்தது )                 ( விலை: ரூ.3-2-0

இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்