திருக்குறள் -சிறப்புரை
:1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும்
நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
---- ௧0௬௬
பயன் கருதாது பால் சுரந்தூட்டும் பசுவின் நிலைமை கண்டு இரங்கிக் கொஞ்சம்
நீர் கேட்டு, ஒருவன் இரந்து நின்றாலும் அவ்வாறு இரத்தலைப்போலும் அவன் நாவிற்கு இழிவினைத்
தரவல்லது வேறு ஒன்றும் இல்லை.
“உள்ளது சிதைப்போர் உளர்
எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும்
இளிவு….” ---குறுந்தொகை.
தாம் முயன்று தேடாது, தம் தாயத்தாரால் தேடி வைக்கப் பெற்ற செல்வத்தை அழிப்பவர்,
உயிருள்ளவராக உலகோரால் எண்ணப்படார். அவ்வுள்ளது சிதைத்தபின், ஒன்றும் இல்லோராய் உயிர்
வாழ்தல், இயல்பாகவே வறுமை உடையோராயினர், அத்தகையோர் வாழ்க்கை, பிறரிடம் சென்று இரந்து
உயிர் வாழ்வதைவிட இழிவானதாகும்.
எவ்வகையானும் இரத்தலைவிட இழிவானது வேறு எதுவும் இல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக