திருக்குறள் -சிறப்புரை
:1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர்
கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். ---- ௧0௭௮
சான்றோர், மெலியோர் குறையைக்
கேட்டவுனே அவர்தம் குறையைப் போக்குவர்; கீழ்
மக்களோ, கரும்பை அடித்து நொருக்கிப் பிழியப் பயன்படுவதைப் போல, வலியோர் வலிமைக்கு அடங்கியே
பயன் தருவர்.
“கடித்துக் கரும்பினைக்
கண் தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்
வடுப்பட வைது இறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயில் சிதைந்து.
“ -----நாலடியார்.
கரும்பை, கடித்துக் கணுக்கள் உடையும்படி நெரித்து, ஆலையில் இட்டுத் துவைத்துச்
சாறு எடுத்தாலும் அது சுவை உடையதாகவே இருக்கும். அதுபோல் நற்குடியில் பிறந்தாரைப் பிறர்
திட்டிப் பேசினாலும் தமது வாயினால் தம்மை வைதவர் மனம் நோகும்படியான சொற்களைச் சொல்ல
மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக