திருக்குறள் -சிறப்புரை
:1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.---- ௧0௯0
காய்ச்சி எடுக்கப்பட்ட மது, உண்டார்க்கு மட்டுமே அல்லாமல்; காமம் போல் கண்டார்மாட்டு மகிழ்ச்சியினைச் செய்தல்
இல்லை.
“ காமம் கணைந்து எழ கண்ணின்
களி எழ
ஊர்மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
கள்ளின் களி எழக் காத்தாங்கு…”
---பரிபாடல்.
தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பை
ஊரார்க்கு அஞ்சி மறைப்பவருடைய நிலைமை, கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பைப் புறத்தார்க்குப்
புலப்படாது மறைப்பவருடைய நிலைமையை ஒக்கும். தாமே தம்மை அறியாது வெளிப்படுத்திக் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக