திருக்குறள் -சிறப்புரை
:1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து. ---- ௧0௮௫
உயிரைப் பறிக்கும் கூற்றுவன்
தானோ….ஈர்க்கும் தன்மையால், பெண்ணின் கண்கள் தானோ…. மருளும் பார்வையால் பெண் மானின்
கண்களோ…. யாதென்று அறியேனே..! இப்பெண்ணின் கண்கள் இம்மூன்று தன்மைகளையும் உடையதாய்
இருக்கின்றனவே..!
“ செய்வினைக்கு அகன்ற காலை
எஃகுற்று
திருவே றாகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக் காண்
தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு
உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான்… ….. ----
அகநானூறு.
பொருளீட்டும் வினைக்குப் பிரிந்து சென்ற காலத்தே…! கத்தியால் அறுக்கப்பெற்று,
இரு பிளவாகிய விளங்கும் வனப்பினையுடைய மாவின் நறிய வடுப்போல, காணும்தொறும் களிப்பு மேவுதல் குறையாத பார்வையினையுடைய
மையுண்ட கண்களை, நினையாது கழிந்த நாளில், யான் சிறிதும் உயிர் தரித்திரேன் எனத் தெளிவித்து,
நின்றதை நினைவுகூர்ந்தான் தலைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக