திருக்குறள் -சிறப்புரை
:1065
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்.----- ௧0௬௫
தன் வீட்டு அடுமனையில் ஆக்கப்பட்ட
தெளிந்த நீர் போலும் கூழாயினும் தன்னுடைய உழைப்பினால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.
“விருப்பு இல்லார் இல்லத்து
வேறு இருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெம் கருனை
வேம்பாம் – விருப்புடைத்
தன் போல்வார் இல்லுள் தயங்கு
நீர் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து,”
---நாலடியார்.
தன்மேல் அன்பில்லாதவர்களுடைய வீட்டில் வேறாயிருந்து பூனைக் கண்ணைப்போன்ற
பொரிக்கறி உணவு வேம்பைப்போல் கசப்பாம் ; விருப்பமுள்ள தன்னோடு ஒத்தவருடைய வீட்டில்
உண்ணப்படும் தெளிந்த நீரிலேயுள்ள புல்லரிசிக் கூழானது உடம்பிற்குப் பொருந்திய அமிழ்தமாகும்.
வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்கு