திருக்குறள் -சிறப்புரை
:1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். ----- ௧0௭௯
உழைத்த பொருளைக் கொண்டு நன்றாக உடுத்தும் உண்டும் வாழ்வாரைக் கண்டால்,
கயவர்கள் பொறாமை கொண்டு, அவரிடத்துக் குற்றம் இல்லையானும் குற்றம் காண்பதில் வல்லவர்கள்.
“ கோடு ஏந்து அகல் அல்குல்
பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார்
–கூடிப்
புதுப் பெருக்கம் போலத்
தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றை யவர்.”
----நாலடியார்.
குடும்பப் பெண்கள் ஆடை அணிமணிகளாலே தம்மை வியக்கச் செய்து, பிறரிடத்துப்
பொருள் பறிப்பதில்லை ; வேசியரோ அப்படிச் செய்வார்கள். அதுபோல், தம் குணங்களைக் காட்டி
வியக்கச் செய்யாமல் அடங்கி இருப்பார்கள் ; கயவர்களோ வெகு மேன்மை உள்ளவர் போல் நடித்துக்
காட்டிப் பிறரை வஞ்சித்துப் பொருள் பறித்துக்கொண்டு போவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக