திருக்குறள் -சிறப்புரை
:1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.----- ௧0௭௫
அச்சப்பட்டுக்கிடப்பதே கீழ்மக்களின் இயல்பாகும். அஞ்சி ஒடுங்குவது ஒழித்து
உழைத்துப் பொருளை ஈட்டவேண்டும் என்று ஆசைப்பட்டாலே ஒரு சிறிதாவது அச்சம் ஒழியும்.
”செழும் பெரும் பொய்கையுள்
வாழினும் என்றும்
வழும்பு அறுக்கில்லா தேரை – வழும்பில்சீர்
நூள்கற்றக் கண்ணும் நுணுக்கம்
ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.
----நாலடியார்.
தவளைகள் செழிப்பான குளத்தில்
எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தம்மேலுள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள
மாட்டா. குற்றமில்லாத சிறப்புடைய பல நூல்களைக் கற்ற போதும் நுணுகி நோக்கும் அறிவு இல்லாதார்,
நூற்கருத்தை அறிந்து கொள்ளும் தன்மையுடையர்
அல்லர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக