திருக்குறள் -சிறப்புரை
:1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். ------- ௧0௭௩
தேவராகிய மேலோர் போன்றவர்கள் கயவர்கள். எப்படியெனின் தேவரும் கயவரும்
மனம்போன போக்கில் தாம் விரும்பியவற்றை விரும்பியவாறே செய்யும் இயல்புடையவர்கள்.
”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார்
முழுமக்கள் –கோட்டை
வைரம் செறிப்பினும் வாள்
கண்ணாய் பன்றி
செயிர் வேழம் ஆகுதல் இன்று.
–நாலடியார்.
வாள் போன்ற கண்ணை உடையவளே..! நற்குடியில் பிறந்தார் பொருள்வளம் இழந்த
காலத்திலும் செய்கின்ற நற்செயல்களைக் கயவர்கள் பொருள்வளம் கொண்ட காலத்திலும் செய்யமாட்டார்கள்.
பன்றியின் கொம்பில் பூணைப் பூட்டினாலும் அது வீரம்கொண்ட யானை ஆகிவிடாது. மேலோர் இயற்கையும்
கீழோர் இயற்கையும் மாறா என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக