திருக்குறள் -சிறப்புரை
:1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து. ----- ௧0௮௨
அவ்வழகியை யான் நோக்கிய அளவில் அவளும்
எதிர் நோக்கினாள் ; அவள் நோக்கு, தன்னைத் தாக்கித் துன்புறுத்தவல்ல அணங்கு (மோகினி) ஒரு படைகொண்டு வந்து தாக்கியதைப் போன்றதன்றோ..!
’கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழிபோல
சேயரி பரந்த மாஇதழ் மழைக்கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.” -----நற்றிணை.
கொடிய வில்லை உடைய வேட்டுவன், கோட்டினை உடைய
பன்றியை எய்து கொன்ற அம்பைப் போன்று, செவ்வரிகள் பரந்த கரிய புறவிதழ்களைக் கொண்ட குளிர்ச்சி
பொருந்திய கண்களினால் இதுகாறும் நான் பெறாத பார்வையைப் பெற்ற, என் வருந்திய நெஞ்சம்
உய்யும் வண்ணம் நன்முறையில் நகைசெய்து உரைப்பாயாக..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக