திருக்குறள் -சிறப்புரை
:1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாத வர்க்கு.------ ௧0௭௭
கயவர், தம் கன்னத்தை அடித்து உடைக்கும் வலியாரின் வளைந்த கையினை உடையவர்க்கேயன்றிப்
பிறர் இரந்து நின்றாலும் அவர்க்குத் தாம் உணவு உண்ட கையைக்கூட உதற மாட்டார்கள். உண்ட
கையை உதறினால் ஒரு பருக்கை சோறாவது விழுந்துவிடுமே அதனால் அவ்வாறு கூறினார்.
“தளிர்மேல் நிற்பினும் தட்டாமல்
செல்லா
உளிநீரர் மாதோ கயவர் – அளிநீரார்க்கு
என்னானும் செய்யார் எனைத்தானும்
செய்யவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.” ----நாலடியார்.
தளிரின் மேல் நின்றாலும் ஒருவர் தட்டித்தள்ளாமல் போகமாட்டாத உளியின் தன்மை
உடையவர்கள் கயவர்; மென்மையானவர்களுக்கு எந்த
உதவியும் செய்ய மாட்டார்கள் ; அடித்து உதைத்துத் துன்பப்படுத்துவோர்க்கு எவ்வளவு வேண்டுமானாலும்
கொடுப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக