சனி, 2 மார்ச், 2019


திருக்குறள் -சிறப்புரை :1151

116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை. ---- ௧௧௫௧

என்னைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டேன் என்று சொல்வதாக இருந்தால் என்னிடத்தில் சொல் ; பிரிந்துசென்று விரைந்துவருவேன் என்று கூறுவதாயிருந்தால், அதனை நீ வரும்வரை உயிரோடு இருக்க வல்லாராரிடத்துச் சொல்.

பொய்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
 எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
அந்நாள் கொண்டு இறக்கும் இவள் அரும்பெறல் உயிரே.” –கலித்தொகை.

நெடுந்தகாய்…! பொய்யே ….. இவளுக்கு அருளுதலை விரும்பிப் பாதுகாத்தலைக் கைவிட்டு நீ, விரும்பிய அச்சுரத்தில் எந்நாளில், நீ செல்வையோ அந்நாள், இவளுடைய அரிய உயிரைக் கொண்டுபோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக