வெள்ளி, 1 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1150


திருக்குறள் -சிறப்புரை :1150

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்குமிவ் வூர்.----- ௧௧௫0

ஆற்றாமையானது தாங்குதற்கு அரிதான நிலையில், உடன்போக்கு மேற்கொள்ள ஏதுவாக, யாம் முன்பே விரும்பியதாகிய அலர் தூற்றலை இவ்வூர் தானே முன்னெடுத்தது ; இனிக் காதலுரும், யாம்  வேண்டியபொழுது உடன்போக்கை இனிதே நேர்கொள்வார் ; இவ்வூர், நமக்கு அலர்தூற்றியே நன்மை செய்துள்ளது.

ஊஉர் அலர் எழ சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறனில் அன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு.”
………. …………..  ………  ………….
பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீரே குறுந்தொகை

ஊரில் அலர் தோன்றவும் ; சேரியில் கல்லென ஆரவார ஒலி கேட்பவும் ; நம்மை வருத்துகின்ற இரக்கமற்ற தாய் நம்மைப் பிரிந்து தன்னுடைய மனைக்கண் தனியே இருப்பாளாகுக. யான் நெடுந்தொலைவில் உள்ள அவருடைய நாட்டில், யானையின் காலடி ட்ட சுவட்டில் தேங்கிய நீரை, நெல்லிக்காயைத் தின்ற, முள்ளைப்போன்ற கூரிய பற்கள் விளங்கும்படி, நீர் உண்ணுதலை நினைந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக