திருக்குறள்
-சிறப்புரை
:1157
துறைவன்
துறந்தமை
தூற்றாகொல்
முன்கை
இறைஇறவா
நின்ற
வளை. ---- ௧௧௫௭
தலைவன் பிரிந்துசென்றமையால் ஆற்றாது உடல் மெலிய, என்னை அறியாமலேயே என் முன்கையில் இருந்த வளையல்கள்
கழன்று வீழவே, தலைவன் என்னைப் பிரிந்தான் என்றதை அறிந்த இவ்வூரார்
அலர் தூற்றாமல் இருப்பார்களோ..?
“பெருங் கடற்கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்து என்
இறையேர் முன்கை நீங்கிய வளையே.” ------ஐங்குறுநூறு.
பெரிய கடற்கரையிலுள்ள சிறு வெண் காக்கை, கரிய கழியின் நீர் துவலையாகத் தெறிப்பதனால்
உண்டான ஒலியைக் கேட்டுக் கண்ணுறங்கும் துறைக்குத் தலைவன் என்னைவிட்டு நீங்கிச் சென்றமையால்
அப்பொழுதே என் அழகிய முன் கையில் அணிந்திருந்த வளைகள் கழன்றோடின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக