வெள்ளி, 15 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1164


திருக்குறள் -சிறப்புரை :1164

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். ---- ௧௧௬௪

காமநோய், கடல்போல் பெருகி வருத்துகிறது ; ஆனால், அதனை நீந்திக்கரையேறப் பாதுகாப்பான தோணி கிடைக்கப்பெறவில்லை.

யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப
மாமேலேன் என்று மடல் புணையா நீந்துவேன்
தேமொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு.” -------கலித்தொகை.

தேன் போலும் மொழியாள், தான் என்னைக் காமுறாதே, என்னைக் காமுறுத்தின காமமாகிய கடலில் அகப்பட்டு, உசாத்துணை இல்லாத நடுயாமத்தும்  உசாத்துணையுள்ள பகலிடத்தும் மன வருத்தமாகிய அலைகள் வந்து துன்புறுத்தின ; இதனால் மாவின் மேலே இருக்கின்றேன் என்று மனத்தால் கருதி, அம் மடல் மாவை ஒரு தெப்பமாகக் கொண்டு காமக்கடலை நீந்துவேன் ; அஃது என் நிலை என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக