திருக்குறள்
-சிறப்புரை
:1168
மன்னுயி
ரெல்லாம்
துயிற்றி
அளித்திரா
என்னல்லது
இல்லை
துணை.----- ௧௧௬௮
இரவே நீ மிகவும் இரங்கத்தக்காய்..! இவ்வுலகத்தில் உள்ள நிலைபெற்ற உயிர்கள் அனைத்தையும்
உறங்கச்செய்து, துயிலாது தனித்திருக்கும் உனக்கு என்னையன்றி வேறு
துணை இல்லையே.
“சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.” ----குறுந்தொகை.
தோழி…!
கார்ப்பருவத்தின் இறுதி நாட்களில், சேற்றில் நிற்றலை
வெறுத்த, சிவந்த கண்களையுடைய எருமை, இருள்
செறிந்த நள்ளிரவில் ஐ
என்ற ஒலியெழுப்பிச் சேற்றைவிட்டு வெளியே வரக் கரையும், அத்தகைய
அச்சத்தைத்தரும் கூதிர்ப்பருவத்தும், என்னுடைய நெஞ்சு வருந்திப்
புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர் காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை
எண்ணிக்கொண்டு இருப்பது போல என் கண்கள் உறங்காதிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக