ஞாயிறு, 3 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1152


திருக்குறள் -சிறப்புரை :1152

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.-- ---- ௧௧௫ ௨

தோழி..! களவுக்காலத்து அவர், அன்புகனிந்த நோக்கு நமக்கு இன்பம் உடையதாயிருந்தது ; இன்றோ புணர்வு நிகழாதாகுமோ என்றும் பிரிவர் என்ற அச்சமும்  துன்பம் தருவதாயினவே.

வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்கு உரைத்தோரும் தாமே
அழாஅல் தோழி அழங்குவர் செலவே.” ----குறுந்தொகை.

பொருள்தேடும் வினையாற்றல் ஆடவர்க்கு உயிர் போன்றது ; ஒளி பொருந்திய நெற்றியை உடைய இல்லறக் கடமையாற்றும் மகளிர்க்கு அவர்தம் கணவரே உயிர் போன்றவர் என நமக்குக் கூறியவர் நம் தலைவரே, அதனால் அழுதலை ஒழிவாயாக ; அவர் நின்னைப் பிரிந்து செல்லுதலைத் தவிர்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக