திருக்குறள்
-சிறப்புரை
:1172
தெரிந்துணரா நோக்க உண்கண்
பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். ----- ௧௧௭௨
எதனையும் ஆராய்ந்தறியாது, அன்று காதலரை எதிநின்று நோக்கி நின்ற மையுண்ட
கண்கள் தலைவனிடம் தம்மை இழந்து, இன்று நாமே விரும்பித் தேடிக்கொண்ட உறவுதானே என்று உய்த்துணராது
, துன்பத்தில் உழல்வது எது கருதியோ..?
“மலர் ஏர் உண்கண் மாண்நலம் தொலைய
வளை ஏர் மெந்தோள் நெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்ட ஓர் சிறு நல் நட்பே.” -----குறுந்தொகை.
தோழி..!
தன்னியல்பினை முற்றிலும் அறிந்து கொள்வதற்குப் பொருந்தாத தலைவனொடு யாம்
ஏற்படுத்திக்கொண்ட சிறிய நல்ல நட்பானது, குவளை மலர் போன்ற அழகிய
மையுண்ட கண்களின் மாட்சிமைப்பட்ட
தன்மை அழிய, வளையணிந்த அழகிய மெல்லிய தோள்களில் அவ்வளைகள் கழலுமாறு
நெகிழ்ந்தமைக்கு மேலும் மாற்றாக அமைந்தது, அது குறித்து நீ ஆற்றினாயல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக